ப.பாண்டி திரைவிமர்சனம் – (பாசபோராட்டம்) Rank 4/5
தனுஷ் தமிழ் சினிமாவில் எல்லோராலும் மிக உன்னிப்பாக கவனிக்கப்படும் ஒரு நபர் என்று தான் சொல்லணும் காரணம் ஒரு நடிகனாக அதுவும் மிகவும் சாதரணமாக ஒல்லியான உருவத்தில் சினிமாவுக்கு வந்தபோது இவரை கிண்டல் செய்யாத நபரே கிடையாது என்று சொல்லலாம் இவரை கிண்டல் செய்த பலர் இவரிடம் இவரின் கால்ஷீட்க்கு தவம் இருக்கும் அளவுக்கு ஒரு முன்னேற்றம் அது நடிப்பில் மட்டும் இல்லை ஒரு பாடகனாக ஒரு பாடலாசிரியராக ஒரு ஒரு தயாரிப்பாளராக இதில் அனைத்திலும் மிக பெரிய வெற்றி இப்போது புதிய அடுத்த கட்ட அவதாரம் இயக்குனர்.
ராஜ்கிரண், ரேவதி, மடோனா செபாஸ்டியன் பிரசன்னா சாயாசிங் ரின்ஷன் ஆடுகளம் நரேன் நடிப்பில் தனுஷ் இயக்குனராக அறிமுகமாகி நடித்திருக்கும் ப. பாண்டி இந்த படத்துக்கு ஒளிப்பதிவு வேல்ராஜ் இசை சான் ரோல்டன் . சரிவாங்க கதைகளம் பாப்போம்.
சினிமாவின் சண்டை மாஸ்டர் ராஜ் கிரண் வயதான காலத்தில் தன் ஒரே மகன் பிரசன்னா மருமகள் சா...
