Sunday, June 21
Shadow

பாடலாசிரியர் பழனிபாரதி பிறந்தநாள் பதிவு

திரைப்படங்களில் இவர் பாடல்கள் தனித்தன்மை கொண்டதாக விளங்கின. கவிதைநூல்கள் பலவும் எழுதி வரும் இவர் தை என்னும் ஆண்டு இதழின் ஆசிரியர் குழுவிலும் ஒருவராக உள்ளார். இளையராஜா இலக்கிய விருது உட்பட பல விருதுகளை இவர் பெற்றிருக்கிறார்.

இவரை உவமைக் கவிஞர் சுரதா “இதோ ஒரு மகாகவி புறப்பட்டு விட்டான்” என்று பாராட்டியுள்ளார். பெரும்புள்ளி என்ற திரைப்படத்தில் பாடல் எழுதி தமிழ்த் திரையுலகிற்கு அறிமுகம் ஆனார். 1500க்கும் மேற்பட்ட திரைப்பாடல்களை எழுதியுள்ளார்.

இவர் விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் 60ஆவது பிறந்தநாளுக்குப் பிரபாகரன்… வழித்துணையல்ல.. வழி என்ற பாடலை எழுதி வெளியிட்டார்.

இவர் பாடல் இடம் பெற்ற படங்கள்

உள்ளத்தை அள்ளித்தா, காலமெல்லாம் காதல் வாழ்க, நினைத்தேன் வந்தாய், பத்ரி, பிரண்ட்ஸ், நந்தா, அழகி, காதல் கொண்டேன், பேராண்மை, பிதாமகன், ஜெயம், அவள் வருவாளா, மேட்டுக்குடி, காசி, அருணாச்சலம் மற்றும் காதலுக்கு மரியாதை இவை முக்கிய படங்கள் மேலும் பல படங்கள் அடங்கும்