Wednesday, March 26
Shadow

பண்டிகை – திரைவிமர்சனம் ( கொண்டாட்டம் ) Rank 3.5/5

பண்டிகை படம் மூலம் மேலும் ஒரு புதிய இயக்குனர் பெரோஸ் இளம் இயக்குனர் யாரிடமும் உதவி இயக்குனாராக இல்லாமல் நேரடியாக இயக்குனராக களம் இறங்கியவர் இயக்குனர் பெரோஸ் முதல் படம் முத்திரை படமாக அமைத்துள்ளார் என்று சொன்னால் மிகையாகது என்று தான் சொல்லணும். தமிழ் சினிமாவுக்கு புது கதை ஸ்ட்ரீட் பைட் யாரும் தொடாத களம் முதல் முறையாக தொட்டு வெற்றிகன்டுள்ளார் என்று தான் சொல்லணும். அதுவும் படத்தின் முதல் பாதி சும்மா விறு விறுன்னு போகுது ஒவ்வொரு காட்சியும் மிகவும் எதார்த்தமாக இருக்கு என்பதை விட படு கிருப்பாக இருக்கு என்று தான் சொல்லணும் ஆனால் கொஞ்சம் ரத்த வாடை அதிகம் சண்டை படம் என்பதால் அதுவும் தெரியவில்லை.

படத்தை இயக்குனர் மகள் விஜயலட்சுமி தயாரித்து இருக்கிறார் அவர் கணவர் தான் இயக்குனர் பெரோஸ் கணவனுக்கு வாய்ப்பு கொடுத்து வெற்றியும் கண்டுள்ளார் என்று தான் சொல்லணும். இயக்குனர் பெரோஸ் நிச்சயம் தமிழ் சினிமாவில் ஒரு மிக பெரிய இடத்தை பிடிப்பார் என்பதில் சந்தேகம் இல்லை என்று திட்டவட்டமாக சொல்லலாம் சரிவாங்க படத்தின் கதை மற்றும் தொழில் நுட்ப கலைஞர்கள் யார் என்று பார்ப்போம்.

படத்தின் நாயகனாக கிருஷ்ணா இவர் எப்ப தமிழ் சினிமாவில் எப்ப ஒரு முழு நடிகர் பட்டம் கிடைக்கும் என்று எதிர்பார்த்த அவருக்கு இந்த பண்டிகை நிச்சயம் குதூகலம் என்று தான் சொல்லணும். சிறப்பான சண்டை சிறப்பான நடிப்பு என எல்லாவற்றையும் மிகவும் கச்சிதமாக கொடுத்துள்ளார் இந்த படம் மூலம் நிச்சயம் ஒரு இடத்தை பிடிப்பார்.

நாயகி கயல் ஆனந்தி பெரிதாக ஒன்னும் காட்சிகள் இல்லை இருந்தாலும் தனக்கு கிடைத்த வாய்ப்பை மிகவும் சரியாக பயன்படுத்தியுள்ளார் என்று சொல்லணும் குறிப்பாக பீர் அடித்துவிட்டு மப்பு தலைக்கு ஏறி அவர் கிருஷ்ணாவை படுத்தும் பாடு ரசிக்கவைக்கிறது

சித்தப்பு சரவணன் கிருஷ்ணாவை சண்டையில் மட்டும் இல்லை அவரை வைத்து எப்படி பணம் சம்பாதிக்கணும் எப்படி எல்லாம் கிருஷ்ணாவை பேசியே கவிழ்த்து அவர் காரியத்தை சாதிக்கிறார் படத்தில் கிருஷ்ணா எவ்வளவு முக்கியமோ அத அளவுக்கு இவரும் முக்கியம் தன் கதபாத்த்ரத்தை உணர்ந்து நடித்து இருக்கிறார். படத்தின் வெற்றிக்கு மிகவும் பலமாக இருந்து இருக்கிறார்.

மதுசூதனன் கோலிசோட படம் மூலம் தமிழ் சினிமாவுக்கு வந்த வில்லன் மிகவும் எதார்த்தமான வில்லன் மிகவும் சிறப்பாக நடித்துள்ளார். சூதாட்ட கிளப் தலைவன் வேடத்துக்கு மிகவும் பொருத்தமாக இருக்கிறார் அதேபோல நடிப்பில் பின்னி இருக்கிறார். வஞ்சகம், வேஷம் என சூதாட்டத் தளபதியாக மதுசூதனின் அட்டகாசப்படுத்தி இருக்கிறார். தான் நடிக்கும் ஒவ்வொரு படங்களிலும் தனது கதாபாத்திரம் குறித்து பேசவைக்கும் அருள்தாஸ், இந்த படத்திலும் அனைவரையும் கவரும்படி நடித்திருக்கிறார். காமெடியில் பிளாக் பாண்டி படம் முழுக்க வந்தாலும், அவரது காமெடி அவ்வளவாக எடுபடவில்லை. குறைவான காட்சியில் வந்தாலும், கருணாஸ் அனைவரையும் எதிர்பாராத சிரிப்புக்கு ஆளாக்குகிறார். நிதின் சத்யா, அர்ஜய், சண்முகராஜன் என அனைவரும் கதாபாத்திரத்திற்கு தேவையானதை சிறப்பாக கொடுத்திருக்கின்றனர்.

தமிழ் சினிமாவில் இதுவரை வெளிவராத ஸ்ட்ரீட் சண்டையை அறிமுகப்படுத்தி, அதில் வெற்றியும் கண்டிருக்கிறார் ஃபெரோஸ். குறிப்பாக இளைஞர்கள் விரும்பிப் பார்க்கும்படியாக படத்தை இயக்கி இருப்பது படத்திற்கு பலம். சூதாட்டம், சண்டை, காதல் என அனைத்தையும் ஒரு கலவையாக கொடுத்திருக்கிறார். அதற்கேற்றாற் போல், திரைக்கதையை அமைத்திருப்பது படத்தை ரசித்து பார்க்கும் படி இருக்கிறது.

மொத்தத்தில் பண்டிகை ஒரு செம கொண்டாட்டம் Rank 3.5/5

Leave a Reply