Saturday, April 18
Shadow

பாடலாசிரியர் வைரமுத்து பிறந்த தின பதிவு

வைரமுத்து புகழ் பெற்ற தமிழ்த் திரைப்படப் பாடலாசிரியர் மற்றும் கவிஞர் ஆவார். சிறந்த பாடலாசிரியருக்கான இந்திய அரசின் விருதை ஏழு முறை பெற்றுள்ளார். நிழல்கள் (1980) எனும் திரைப்படத்தில் “பொன்மாலைப் பொழுது” எனும் பாடலை முதன்முதலில் எழுதிய இவர் சனவரி 2009 வரை 5800 பாடல்களை எழுதியுள்ளார். முன்பு இளையராஜாவுடனும், பின்னர் ஏ. ஆர். ரகுமானுடனும் இவர் இணைந்து வழங்கியப் பாடல்கள் புகழையும் பல விருதுகளையும் பெற்றுள்ளன.

தமிழ்நாடு மாநிலம் தேனி மாவட்டம், பெரியகுளம் அருகில் உள்ள வடுகபட்டியில் ராமசாமித்தேவர் – அங்கம்மாள் ஆகியோருக்கு மகனாக விவசாயக் குடும்பத்தில் பிறந்தார். சென்னை பச்சையப்பன் கல்லூரியில் தமிழ் இலக்கியம் பயின்றார். 1980இல் “நிழல்கள்” திரைப்படத்தில் “இது ஒரு பொன்மாலைப் பொழுது..” எனத் தொடங்கும் பாடலை முதன் முதலில் இயற்றினார். இவருடைய மனைவியின் பெயர் பொன்மணி. இவருக்கு மதன் கார்க்கி, கபிலன் என இரு மகன்கள் உள்ளனர்.

திருவாரூர் மத்தியப் பல்கலைக்கழகத்தின் செனட் உறுப்பினராக கவிஞர் வைரமுத்து நியமிக்கப்பட்டார். மத்திய மனித வள மேம்பாட்டுத் துறையினால் நியமிக்கப்பட்டுள்ள இந்தப் பதவியின் காலம் மூன்றாண்டுகள் ஆகும்.


இவர் பாடல்கள் இடம் பெற்ற படங்கள்: க/பெ.ரணசிங்கம், அழியாத கோலங்கள், காக்கி, ஒரு கதை சொல்லட்டுமா, நிமிர், பிரான்மலை, பைரவா, காற்று வெளியிடை, நெஞ்சில் துணிவிருந்தால், வாய்மை, உச்சத்துல சிவா, மனிதன், கோடை மழை, 24, வாகா, பாயும் புலி, கங்காரு, ஜீவா, சதுரங்க வேட்டை, ஜெய் ஹிந்த் 2, லிங்கா, ஜில்லா, புலிவால், கோச்சடையான், பாண்டிய நாடு, இரண்டாம் உலகம், நவீன சரஸ்வதி சபதம், நீர்ப்பறவை, பெண் சிங்கம், அயன், மொழி, பெரியார், வரலாறு, வட்டாரம், உள்ளம் கேட்குமே, ஆய்த எழுத்து, செல்லமே, அருள், அட்டகாசம், வசூல் ராஜா எம் பி பி எஸ், அன்பே சிவம், வில்லன், யூத், கன்னத்தில் முத்தமிட்டாள், ஆளவந்தான், பார்த்தாலே பரவசம், 12 B, ஷாஜகான், கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன், ரிதம், சிநேகிதியே, முகவரி, உயிரிலே கலந்தது, என்னவளே, ஜோடி, ஆனந்த பூங்காற்றே, வாலி, என்றென்றும் காதல், துள்ளாத மனமும் துள்ளும், காதல் மன்னன், நிலாவே வா, உல்லாசம், ஒன்ஸ்மோர், லவ்டுடே, இந்தியன், கல்லூரி வாசல், நம்மவர், பவித்ரா, அமராவதி, ராஜா சின்ன ரோஜா – 1989 ( தமிழ் )

இவர் தயாரித்த படங்கள்: பஞ்சராக்ஷரம்

இவர் நடித்த படம்: ஜோடி