Sunday, April 19
Shadow

அறிமுக இயக்குனர் இயக்கத்தில் ‘பொதுவாக எம்மனசு தங்கம்’ பர்ஸ்ட் லுக் வெளியீடு

‘சரவணன் இருக்க பயமேன்’ படத்தைத் தொடர்ந்து ‘பொதுவாக எம்மனசு தங்கம்’ மற்றும் ‘இப்படை வெல்லும்’ ஆகிய படங்களில் கவனம் செலுத்தி வந்தார் உதயநிதி ஸ்டாலின்.

புதுமுக இயக்குநர் தளபதி இயக்கியுள்ள ‘பொதுவாக எம்மனசு தங்கம்’ படத்தை தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது. நிவேதா பெத்துராஜ் நாயகியாக நடித்து வரும் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் பார்த்திபன். இவர்களோடு சூரி, மயில்சாமி உள்ளிட்ட பலர் நடித்து வருகிறார்கள்.

தேனி, மதுரை, கோவை, சத்தியமங்கலம் உள்ளிட்ட பகுதிகளில் படப்பிடிப்பு முடிக்கப்பட்டு, இறுதிக்கட்டப் பணிகள் நடைபெற்று வருகிறது. ஒளிப்பதிவாளராக பாலசுப்பிரமணியம், பாடலாசிரியராக யுகபாரதி, இசையமைப்பாளராக இமான் ஆகியோர் பணியாற்றி வருகிறார்கள்.

இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை இணையத்தில் வெளியிட்டுள்ளது படக்குழு. ஜூலையில் படத்தை வெளியிட முடிவு செய்துள்ளார்கள்.

Leave a Reply