Sunday, May 18
Shadow

ஜெயம்ரவி கமலுக்கு சமம் போகன் இசை விழாவில் – பிரபுதேவா

ஜெயம்ரவி, அரவிந்த்சாமி, ஹன்சிகா, ஆடுகளம்நரேன், மற்றும் பலர் நடிப்பில் இம்மான் இசையில் ரோமியோ ஜூலியட் படத்தை இயக்கிய லக்ஷ்மன் இயக்கத்தில் உருவாகும் படம் போகன் இந்த படத்தை பிரபுதேவா மற்றும் அவர் நண்பர் ஐசரி கணேஷ் தயாரிக்கும் இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று மாலை நடைபெற்றது இதில் ஜெயம்ரவி, ஹன்சிகா, பிரபுதேவா, இயக்குனர் லக்ஷ்மன், ஐசரி கணேஷ் , மற்றும் ஸ்ரீ கிரீன் புரடக்க்ஷன் சரவணன் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.

இந்த விழாவில் படத்தின் மூன்று பாடல்களும் மற்றும் ட்ரைலர் திரையிட்டனர். படத்தின் பாடல்கள் அனைத்தும் மிக அருமை அதுவும் படத்தின் பாடல்காட்சிகள் ஆங்கில படத்துக்கு நிகராக இருந்தது என்று சொல்லணும் படத்தின் ட்ரைலர் பார்க்கும்போது படத்தை உடனே பார்க்கவேண்டும் என்ற ஆவலை தூண்டுகிறது அந்த அளவுக்கு மிக அருமையாக வித்தியாசமாக இருந்தது மேலும் முதல் முறையாக அரவிந்த்சாமி தன் சொந்த குரலில் ஒரு பாடலை பாடியுள்ளார். அந்த பாடல் நிச்சயம் இந்த வருடத்தில் மிகவும் பேசப்படும் பாடலாக இருக்கும் மிக சிறந்த பாடல்களை கொடுத்த படத்தின் இசையமைப்பாளர் இம்மான் விழாவில் மிஸ்ஸிங்

பின்னர் எல்லோரும் படத்தை பற்றியும் ஜெயம்ரவி , அரவிந்த்சாமி மற்றும் இயக்குனரை பாராட்டி பேசினார்கள். அப்போது பேசிய நடிகரும் இயக்குனரும் ஆன பிரபுதேவா பேசியபோது ஜெயம் ரவி பார்க்கத்தான் அமைதி ஆனால் படபிடிப்பில் மிகவும் சுறுசுறுப்பு அதுமட்டும் இல்லை எல்லா வேலைகளை இழுத்து போட்டு செய்வார் அதேபோல் எல்லா விஷயத்தையும் கேட்டு தெரிந்துகொள்வார் அந்த அளவுக்கு ஈடுபாடு கிட்டத்தட்ட கமல் சார் மாதிரி என்று சொல்லலாம் என்றார் .

Leave a Reply