
உதயநிதி இசுட்டாலின் (Udhayanidhi Stalin) என்பவர் ஒரு தமிழ்த் திரைப்பட நடிகரும், தயாரிப்பாளரும், அரசியல்வாதியும் ஆவார். இவர் இரெட் செயன்டு மூவிசு திரைப்படத் தயாரிப்பு நிறுவனத்தைச் சொந்தமாகக் கொண்டுள்ளார்.
உதயநிதி இசுட்டாலின் தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சரான மு. கருணாநிதியின் பேரனும் மு. க. இசுட்டாலினின் மகனும் ஆவார். இவர் கிருத்திகா என்பவரைத் திருமணம் செய்துள்ளார்.
விசய், திரிசா நடித்த குருவியே உதயநிதி இசுட்டாலினின் தயாரிப்பில் வெளிவந்த முதல் திரைப்படமாகும். உதயநிதி இசுட்டாலினை வழங்குநராகக் கொண்டு வெளிவந்த முதற்றிரைப்படம் கௌதம் மேனனின் விண்ணைத்தாண்டி வருவாயா என்ற திரைப்படம் ஆகும்.
திரைப்பட நடிப்பில் ஆர்வமாக நடித்து வந்த உதயநிதி இசுட்டாலின், தீவிர அரசியலில் ஈடுபட உள்ளேன் ; தொண்டர்களோடு இருக்க விரும்புகிறேன்; இனி என்னை அடிக்கடி திமுக மேடைகளில் காணலாம் எனக் கூறினார்.
இவர் நடித்த திரைப்ப்டங்கள்
ஆதவன், ஒரு கல் ஒரு கண்ணாடி, இது கதிர்வேலன் காதல், நண்பேன்டா, கெத்து, மனிதன், சரவணன் இருக்க பயமேன், பொதுவாக என் மனசு தங்கம், இப்படை வெல்லும், நிமிர்
இவர் தயாரித்த படங்கள்
குருவி, ஆதவன், மன்மதன் அம்பு, ஏழாம் அறிவு, ஒரு கல் ஒரு கண்ணாடி, நீர் பறவைகள்
