
செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோஸ் தயாரிப்பில் ‘புரொடக்ஷன் நம்பர் 13’ – பூஜையுடன் தொடங்கி விறுவிறுப்பான படப்பிடிப்பு
செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் எஸ்.எஸ். லலித் குமார் தயாரிப்பில், நடிகர் எல்.கே. அக்ஷய் குமார் நாயகனாக நடிக்கும் ‘புரொடக்ஷன் நம்பர் 13’ என்ற பெயரிடப்படாத புதிய திரைப்படத்தின் பூஜை சென்னையில் சிறப்பாக நடைபெற்றது. இதையடுத்து படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
‘சிறை’ திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கவனம் பெற்ற நடிகர் எல்.கே. அக்ஷய் குமார் இந்த படத்தில் கதையின் மையக் கதாபாத்திரத்தில் நடிக்கிறார். அறிமுக இயக்குநர் விக்னேஷ் வடிவேல் இயக்கத்தில் உருவாகும் இந்த படத்தில் ஜாபர் சாதிக், நோபல் கே. ஜேம்ஸ், அருணாச்சலேஸ்வரன் பி.ஏ., ஷாரீக் ஹாஸன் மற்றும் ‘டியூட்’ படப் புகழ் நடிகை ஐஸ்வர்யா சர்மா உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

லியோன் பிரிட்டோ ஒளிப்பதிவை கவனிக்க, ஜென் மார்ட்டின் இசையமைக்கிறார். படத்தொகுப்பை பரத் விக்ரமன் மேற்கொள்ள, கலை இயக்கத்தை பி.எஸ். ஹரிஹரன் கவனிக்கிறார். ஆடை வடிவமைப்பாளராக பிரியா பணியாற்ற, கே. அருண் மற்றும் மணிகண்டன் நிர்வாக தயாரிப்பாளர்களாக செயல்படுகின்றனர். எல்.கே. விஷ்ணு குமார் இணை தயாரிப்பாளராக உள்ளார்.
அனைத்து தரப்பினரையும் கவரும் வகையில் ஒரு முழு பொழுதுபோக்கு திரைப்படமாக உருவாகி வரும் இந்த படம், தமிழ் மற்றும் மலையாளம் என இரு மொழிகளில் ஒரே நேரத்தில் தயாராகி வருகிறது. தற்போது இறுதிக்கட்ட படப்பிடிப்பு பணிகள் நடைபெற்று வரும் நிலையில், வருகிற கோடை விடுமுறையில் படத்தை வெளியிட திட்டமிடப்பட்டுள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது.
இதற்கு முன் எல்.கே. அக்ஷய் குமார் நடிப்பில் வெளியான ‘சிறை’ திரைப்படம் உலக அளவில் 30 கோடி ரூபாய்க்கும் மேல் வசூலித்து சாதனை படைத்துள்ளதால், அவரது அடுத்த படமான ‘புரொடக்ஷன் நம்பர் 13’ குறித்து ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.

‘Production No. 13’ by Seven Screen Studios begins with pooja; shooting in full swing
The pooja ceremony of the upcoming yet-untitled film ‘Production No. 13’, produced by S.S. Lalit Kumar of Seven Screen Studios and starring L.K. Akshay Kumar in the lead, was held in Chennai with much fanfare. Following the ceremony, the shooting of the film is progressing at a brisk pace.
Actor L.K. Akshay Kumar, who made a strong impact in Tamil cinema with the film ‘Sirai’, plays the central character in this project. The film is being directed by debutant Vignesh Vadivel. The cast also includes Jaffer Sadiq, Noble K. James, Arunachaleswaran P.A., Shariq Hassan and ‘Dude’ fame actress Aishwarya Sharma in prominent roles.

Cinematography is handled by Leon Britto, with music composed by Jen Martin. Editing is by Bharath Vikraman, while P.S. Hariharan serves as the art director. Priya is the costume designer, and K. Arun and Manikandan are the executive producers. L.K. Vishnu Kumar is associated as the co-producer.
Designed as a complete fun-filled entertainer to appeal to all sections of the audience, the film is being made simultaneously in Tamil and Malayalam. The final schedule of shooting is currently underway, and the makers have announced plans to release the film during the upcoming summer holidays.
Earlier, L.K. Akshay Kumar’s film ‘Sirai’ created a sensation by collecting over ₹30 crore worldwide. With that success, expectations are now running high among fans for updates and the release of his next film, ‘Production No. 13’.
