நடிகர் அல்லு அர்ஜூனின் ‘புஷ்பா2: தி ரூல்’ படத்தில் இருந்து ‘புஷ்பா புஷ்பா’ முதல் சிங்கிள் வெளியாகியுள்ளது!
சர்வதேச தொழிலாளர் தினம் உலகளவில் மே 1 அன்று கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டு மே 1-ஐ கொண்டாட இன்னும் சிறப்பான புதிய காரணம் ஒன்று இணைந்துள்ளது. ஏனெனில், நம் இதயங்களைக் கொள்ளை கொண்ட ‘புஷ்பா2: தி ரைஸ்’ திரைக்கு வர இருக்கிறது. இன்று புஷ்பராஜின் கொண்டாட்டப் பாடல் 6 மொழிகளில் வெளியாகி ரசிகர்களின் புதிய ஆந்தமாக மாறியிருக்கிறது. ‘புஷ்பா புஷ்பா’ என்று பெயரிடப்பட்டுள்ள இப்படத்தின் லிரிக்கல் வீடியோ ஏற்கனவே இணையம் முழுவதும் அதிர்வலைகளை உருவாக்கி வருகிறது.
கடந்த வாரம் வெளியிடப்பட்ட ‘ஹேண்ட் ஆஃப் புஷ்பா’ டீசரில் புஷ்பாவின் கை பிராண்ட் ஆனது. ‘புஷ்பா 1’ படம் வெளியானதிலிருந்து ‘புஷ்பாயிஸம்’ என ரசிகர்களுக்குப் பிடித்த ஒன்றாக உள்ளது. தேசம் முழுவதும் உள்ளா அனைத்து மொழி ரசிகர்களின் இதயங்களையும் ஐகான் ஸ்டார் அல்லு அர்ஜூன் ‘புஷ்பா’வாக மீண்டும் வென்றுள்ளார்.
‘புஷ்பா: தி ரைஸ்’ படத்தின் இசைக்காக தேசிய விருது பெற்ற இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத், ‘புஷ்பா2’ படத்தில் புதிய பாடல் மூலம் மீண்டும் சார்ட் பஸ்டர் இசையைத் தந்துள்ளார். ரசிகர்களின் பிளேலிஸ்ட்டில் இந்தப் பாடல் ரிப்பீட் மோடில் முதலிடம் பிடிக்கும் என்பதில் சந்தேகம் இல்லை. பாடல் வரிகளும் உற்சாகமான இசையும் திரைப்படம் எப்போது வெளியாகும் என்ற ஆர்வத்தை ரசிகர்கள் மத்தியில் இன்னும் அதிகமாக்கியுள்ளது. தெலுங்கு, தமிழ், இந்தி, கன்னடம், மலையாளம், பெங்காலி ஆகிய மொழிகளில் பாடல் வெளியாகியுள்ளது. நகாஷ் அஜீஸ், தீபக் ப்ளூ, மிகா சிங், விஜய் பிரகாஷ், ரஞ்சித் கோவிந்த் மற்றும் திமிர் பிஸ்வாஸ் போன்ற பிரபல பாடகர்களை பாடலை அந்தந்த மொழிகளில் பாடியுள்ளனர். ‘புஷ்பா2: தி ரூல்’ இசையை டி சீரிஸ் வெளியிட்டது.
‘புஷ்பா2: தி ரூல்’ இந்த ஆண்டில் அதிகம் எதிர்பார்க்கப்படும் படம். படத்தை எதிர்பார்த்துக் காத்திருக்கும் வேளையில் வெளியாகியுள்ள இந்த முதல் பாடல் ரசிகர்கள் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. அல்லு அர்ஜுன், ரஷ்மிகா மந்தனா மற்றும் ஃபஹத் பாசில் ஆகியோர் நடித்துள்ள இத்திரைப்படம் ஆகஸ்ட் 15, 2024 அன்று வெளியிடப்பட உள்ளது. மேஸ்ட்ரோ இயக்குநர் சுகுமார் படத்தை இயக்கியுள்ளார் மற்றும் மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரித்துள்ளது.
‘Pushpa Pushpa’! The first single from ‘Pushpa 2 The Rule’ celebrates the uncommon journey of a common man. Released on International Labour Day and all set to rule the music charts!*
Pushparaj declares a powerful message ‘Your hand is your brand’!
1st May, celebrated globally as international Labour Day, marks a special day this year as we welcome a new reason for celebration. Pushpa’s story of a common labourer ruled our hearts when he burst on to the screens with ‘Pushpa The Rise’ and now he is back to Rule as the celebratory song of Pushparaj releases today in 6 languages to become the new anthem of ambition. The lyrical video which gives glimpses from the film titled ‘Pushpa Pushpa’ is already creating waves all over the internet.
The video displays the power of Brand Pushpa which was teased in with the ‘Hand of Pushpa” teaser which was launched last week setting audiences into a frenzy. The launch of the song puts Pushpa’s stamp of authority on the world of entertainment with a scintillating hook step and brings alive the craze of ‘Pushpaisms’ which have become pop culture since the release of Pushpa 1. Icon Star Allu Arjun proves once again why he is the star who cuts across every language and every border across the nation and rules our hearts and minds.
Music director Devi Shri Prasad who won a National Award for the music of Pushpa the Rise, with the new song has again created a heart throbbing number. The groovy tune of the song is definitely an earworm and is set to top the music charts for days to come. The lyrics and the upbeat music are no less than a catalyst to the audiences overwhelming anticipation for the film release. The song is released in Telugu, Tamil, Hindi, Kannada, Malayalam & Bengali languages. Devi Shri Prasad has roped in popular singers like Nakash Aziz, Deepak Blue, Mika Singh, Vijay Prakash, Ranjith Govind & Timir Biswas to sing the respective versions of the song. The music of Pushpa 2 The Rule is released all over by T Series.
Pushpa 2 The Rule is the most awaited film of 2024 and as the nation waits in anticipation for this Tsunami of entertainment the first track has only heightened expectations. Slated to release on August 15th, 2024 the film features the powerful cast of Allu Arjun, Rashmika Mandanna and Fahadh Faasil, is helmed by Maestro director Sukumar & produced by Mythri Movie Makers in association with Sukumar Writings.