
ரஜினிகாந்த் மற்றும் ஏ.ஆர்.முருகதாஸ் படம் பல காரணங்களால் தள்ளிக்கொண்டே போகிறது தற்போது மீண்டும் படம் தள்ளிப்போகிறது இந்த வருடம் தலைவர் தரிசனம் இருக்குமா என்பது கேள்வி குறியாக இருக்கிறது கடந்த வருடம் மூன்று படங்கள் கொடுத்த தலைவர் இந்த வருட தரிசனம் கேள்விக்குறியாக உள்ளது .
பேட்ட படத்தை அடுத்து ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கும் படத்தில் நடிக்கிறார் ரஜினிகாந்த். அவருக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்க இருக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு காலா படத்தைப்போலவே மும்பையிலேயே நடைபெற உள்ளது.
மார்ச் இறுதியில் இந்த படத்தை தொடங்க இருப்பதாக கூறப்பட்டு வந்த நிலையில், தற்போது மே மாதம் இரண்டாவது வாரத்திற்கு படப்பிடிப்பை தள்ளி வைத்துள்ளனர். இது தேர்தல் நேரம் என்பதால், படப்பிடிப்புக்காக பணம் எடுத்துச் செல்வது, படப்பிடிப்பு நடத்துவது உள்ளிட்ட பல பிரச்னைகள் வரும் என்பதால், படப்பிடிப்பு தேதியை மாற்றி விட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.
