Saturday, April 18
Shadow

ரஜினிகாந்த் மற்றும் ஏ.ஆர் முருகதாஸ் படத்தின் டைட்டில் கசிந்தது

கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் ரஜினி, சிம்ரன், த்ரிஷா, விஜய் சேதுபதி, நவாசுதீன் சித்திக் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் ‘பேட்ட’. விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் பெரும் வரவேற்பு பெற்றது இப்படம்.

ரஜினிகாந்த் மற்றும்  ஏ.ஆர்.முருகதாஸ் இணையும் படம் ரசிகர்களிடம் மிக பெரிய ஒரு எதிர்பார்ப்பை உண்டுபண்ணியுள்ளது இன்னும் தயாரிப்பு நிறுவனம் லைகா நிறுவனத்துடன் பேச்சு வார்த்தை போய்கொண்டு இருக்கிறது ஆனால் ரசிகர்கள் படத்தின் போஸ்டர் வெளியிட்டுள்ளனர் அதில் படத்தின் டைட்டில் தயாரிப்பு நிறுவனம் பெயர் போட்டு வெளியிட்டுள்ளனர் படத்தின் டைட்டில்”166 ”

 

‘பேட்ட’ படத்தைத் தொடர்ந்து ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் நடிக்கும் படத்துக்கு தேதிகள் ஒதுக்கியுள்ளார் ரஜினி. இதன் படப்பிடிப்பு எப்போது என்பதில் பல்வேறு செய்திகள் வெளியாகின. தற்போது மார்ச்சில் படப்பிடிப்பு தொடங்க திட்டமிட்டுள்ளது படக்குழு. இதற்காக 90 நாட்கள் கால்ஷீட் ஒதுக்கியுள்ளார் ரஜினி.

முதலாவதாக சென்னையில் படப்பிடிப்பு தொடங்கி, அதனைத் தொடர்ந்து ஹைதராபாத், மும்பை உள்ளிட்ட பல இடங்களில் நடைபெறவுள்ளது. இதற்காக ரஜினியுடன் நடிக்கவுள்ளவர்கள் தேர்வு மும்முரமாக நடைபெற்று வருகிறது.

அனிருத் இசையமைப்பாளராக பணிபுரியவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனை படக்குழுவினர் இன்னும் உறுதிப்படுத்தவில்லை. இப்படத்தை பெரும் பொருட்செலவில் தயாரிக்க ஆயுத்தமாகி வருகிறது லைகா நிறுவனம் அனால் லைகா நிறுவனம் இன்னும் தன் முடிவை சொல்லவில்லை என்பது குறிப்பிடவேண்டிய விஷயம் இன்னும் பேச்சு வார்த்தை நடந்து கொண்டு இருக்கிறது . மேலும், ஷங்கர் இயக்கத்தில் கமல் நடிக்கும் ‘இந்தியன் 2’ படத்தையும் பெரும் பொருட்செலவில் தயாரித்து வருவது குறிப்பிடத்தக்கது.