Sunday, December 8
Shadow

ரஜினிகாந்த் பற்றிய மக்களின் விமர்சனம் ஆய்வு இரண்டாம் பாகம்

ரஜினிகாந்த் மிக பெரிய புத்திசாலி மக்களை எப்படி ஏமாற்றினால் ஏமாற்ற முடியும் என்று மிகவும் ஆலோசித்து தான் களம் இறங்கியுள்ளார். என்று தான் சொல்லணும். தமிழக மக்களின் வீக் பாயிண்ட் எது என்று மிகவும் புரிந்துகொண்டவர். அதுனாலே எம்.ஜி.ஆர் பாணியை கடைபிடித்தார். முதலில் தன் ஸ்டைல் மூலம் மக்களை கவர்ந்த ரஜினிகாந்த் பின்னர் செண்டிமெட் தான் என்று தனக்கு என்று ஒரு பாணியை உருவாக்கினார்.

நீங்கள் உற்று கவனித்தீர்கள் என்றால் அதிக படங்களில் அம்மா செண்டிமெண்ட் அடுத்து தன் சொத்துகளை பிறருக்கு தானம் கொடுப்பது போலவே நடிக்க ஆரம்பித்தார் இதனால் மக்கள் இவரை தன் வீட்டு பிள்ளைகளாக நினைக்க ஆரம்பித்தனர். ஆனால் இவரோ மக்களை எப்படி எல்லாம் ஏமாற்ற முடியும் என்று யோசிக்க ஆரம்பித்தார் தன் படங்களில் வசனங்கள் பாடல்கள் எல்லாம் மக்களுக்காகவே என்பது போல தன் இயக்குனர்களிடம் கூறி எழுத சொன்னார். இதை இயக்குனர்கள் தொடர்ந்தனர் ஒருவர் செய்த உடன் அனைவரும் செய்ய ஆரம்ம்பித்தனர்.

இதை மிகவும் பயன்படுத்தினார் ஆனால் இன்று வரை மக்களுக்கு எதுவும் செய்யவில்லை இன்றும் மக்களை ஏமாற்றுகிறார். ரசிகர்களை சந்திக்க நினைக்கும் இவர் எதுக்கு அடையாள அட்டை கொடுத்து அதை எடுத்து வருபர்களுக்கு மட்டுமே சந்திப்பார் என்று சொல்லணும். ரசிகர்கள் சந்திப்பு என்று ஆகிவிட்டது அனைவரையும் சந்திக்க வேண்டியது தானே அதிலும் ஒரு ஓரவஞ்சனை எதற்கு நேற்று மூன்றாம் நாள் அன்றும் நாள் ரசிகர்கள் சந்திப்பில் மீண்டும் மக்களை ஏமாற்ற மீண்டும் அரசியல் நாடக ஸ்டேட்மெண்ட் அரசியல் எதுவும் கேட்காதீர்கள் பின்னர் நீங்கள் எப்படி தான் மக்களுக்கு நல்லது செய்ய போகிறீர்கள் அப்பா நீங்கள் பாடியது பேசியது மக்களை ஏமாற்றும் எண்ணம் மட்டும் என்று எடுத்துக்கொள்ளலாம

அனைத்து நதியை இணைக்க ஒரு கோடி கொடுப்பேன் என்று சொன்ன ரஜினிகாந்த் இலங்கை தமிழர்களுக்கு ஐந்து லட்சம் தானே கொடுத்தார் .ஏன் என்றால் நதி நீர் நடக்காது என்பதால் சொன்னார். இன்னொரு விஷயம் காவேரி பிரச்சனையில் அவர் ஒரு கன்னடகாரனாக தான் இறுதி இருக்கிறாரே தவிர தமிழர்களுக்கு ஆதரவாக இல்லை என்று தான் சொல்லணும்.

மொத்தத்தில் தமிழ்களையும் தமிழ் ரத்தத்தை ஊரிந்துள்ளர் தவிர மக்களுக்கு ஒன்றும் செய்யவில்லை மக்களும் அவர் ரசிகர்களையும் இன்றும் ஏமாற்றி வருகிறார். இவரால் நிச்சயம் மக்களுக்கும் அவரி ரசிகர்களுக்கும் ஏன் அவரிடம் பல ஆண்டுகளாக வேலை செய்யும் வேலை செய்பர்களுக்கு கூட நல்லது செய்யமாட்டார்.

 

தொடரும்…….

Leave a Reply