Sunday, April 26
Shadow

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் முதல் அரசியல் மேடை எங்கு தெரியுமா யார் சிலை திறக்கிறார் தெரியுமா

சென்னை அடுத்த வேலப்பன் சாவடி – பூந்தமல்லி நெடுஞ்சாலையில் உள்ள ஏ.சி.எஸ். மருத்துவக் கல்லூரியில் விழா ஏற்பாடுகள் தடபுடலாக நடக்கின்றன. விழாவில் மொரீஷியஸ் நாட்டு குடியரசு துணைத் தலைவர் பரமசிவம்பிள்ளை வையாபுரி கலந்துகொண்டு நூற்றாண்டு விழா கட்டடத்தை திறந்துவைக்கப்போகிறார். இலங்கை கல்வி அமைச்சர் வி.எஸ். ராதாகிருஷ்ணன், எம்.ஜி.ஆர். புகைப்பட கண்காட்சியைத் திறந்துவைக்கப்போகிறார்.

ரஜினி, எம்.ஜி.ஆரின் வெங்கலச் சிலையைத் திறந்துவைக்கப் போகிறார். அவரின் கையில், எம்.ஜி.ஆர். முதல்வராக இருந்தபோது, அவரது அமைச்சரவையில் இடம்பெற்றவர்கள்…அப்போது பணியாற்றிய ஐ.ஏ.எஸ். அதிகாரிகள், எம்.ஜி.ஆருடன் நடத்த நடிகர், நடிகைகள், எம்.ஜி.ஆரின் உறவினர்கள்…என்று முக்கியமானவர்களுக்கு எம்.ஜி.ஆர். விருதுகளை வழங்கப்போகிறார். அரசியல் வானில் ஜொலிக்கப்போகும் ரஜினிக்கு இந்த விழா ஒரு மகுடமாக இருக்கப்போகிறது ” என்றார்.

இதே நேரத்தில், ரஜினி மக்கள் மன்றத்தின் வட மாவட்ட நிர்வாகிகளை ராகவேந்திரா மண்டபத்துக்கு வரச் சொல்லி, ஆலோசனை கூட்டம் நடந்தது. ரஜினிக்குச் சிறப்பான வரவேற்பு தருவது குறித்து அப்போது முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டிருக்கிறது.

விழாவில், எம்.ஜி.ஆர். பற்றிய தனது பசுமையான நினைவுகளை மனம்திறந்து பேசவிருக்கிறார் ரஜினி. அதேநேரம், தற்போதைய அ.தி.மு.க ஆட்சியாளர்களுக்கு எதிராகக் குரல்கொடுக்கப்போகிறார் என்றும் மன்ற நிர்வாகிகள் எதிர்பார்க்கிறார்கள். ” தற்போது ஆட்சியில் இருக்கும் அ.தி.மு.க-வின் ஊழல்கள் பற்றியெல்லாம் எங்களிடம் நிறைய கேட்டு தெரிந்துகொண்டார். மக்களுக்குப் பயனளிக்கும் திட்டங்களை நிறைவேற்றாமல், விளம்பரத்தை மையமாக வைத்து விழாக்களை நடத்தும் எடப்பாடி ஆட்சியை கொஞ்ச காலமாக எங்கள் தலைவர் கவனித்து வருகிறார். நடக்கிற ஊழல் கூத்துகளைக் கேட்டு, டென்ஷன் ஆகிவிட்டார். கடுங்கோபத்தில் இருக்கும் எங்கள் தலைவர், எடப்பாடி அரசை கடுமையாக விமர்சனம் செய்யப்போகும் மேடையாக எம்.ஜி.ஆர். சிலை திறப்பு விழா அமையப்போகிறது. பொறுத்திருந்து பாருங்கள் ” என்கிறார்கள்.

மாவட்ட வாரியாக ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகள் நியமனம் மின்னல்வேகத்தில் நடந்துவருகிறது. இந்தச் சூழ்நிலையில், ரஜினி மேடை ஏறப்போகும் முதல் களம் என்பதால், தமிழகம் முழுவதுமிருந்து அவரது மன்ற நிர்வாகிகள் சென்னைக்குப் படையெடுக்கப்போகிறார்கள்.