Sunday, April 26
Shadow

Tag: MGR

எம்.ஜி.ஆர் – எம்.ஆர்.ராதாவின் வாழ்க்கை வரலாறு திரைப்படமாகிறது

எம்.ஜி.ஆர் – எம்.ஆர்.ராதாவின் வாழ்க்கை வரலாறு திரைப்படமாகிறது

Latest News, Top Highlights
அரசியல் தலைவர்கள், சினிமா, விளையாட்டு பிரபலங்கள் என்று பலரின் வாழ்க்கை வரலாற்று படங்கள் தற்போது உருவாகிவருகிறது. அந்த வகையில், எம்.ஜி.ஆர் - எம்.ஆர்.ராதாவின் வாழ்க்கை வரலாறு படமாகிறது. எம்.ஆர்.ராதாவின் பேரனான ஐக் இயக்கும் இந்த படத்தை ராதிகா சரத்குமார் தயாரிக்கவுள்ளார். இந்நிலையில், இந்த படத்தில் எம்.ஜி.ஆர் கதாபாத்திரத்தில் நடிக்க அரவிந்த்சாமியிடமும், எம்.ஆர்.ராதா கதாபாத்திரத்தில் நடிக்க சிம்புவிடமும் பேச்சு வார்த்தை நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் இந்த படத்தில் எம்.ஜி.ஆருக்கும், எம்.ஆர்.ராதாவுக்கும் ஏற்பட்ட மோதல். எம்.ஜி.ஆரை, எம்.ஆர்.ராதா துப்பாக்கியால் சுட்ட சம்பவம் உள்பட பல முக்கிய காட்சிகள் இடம்பெறும் என்றும் தெரிய வந்துள்ளது....
அடுத்த வாரம் “எம். ஜி. ஆர்” திரைப்படத்தின் ‘டீஸர்’ வெளியீடு

அடுத்த வாரம் “எம். ஜி. ஆர்” திரைப்படத்தின் ‘டீஸர்’ வெளியீடு

Latest News, Top Highlights
பெருந்தலைவர் காமராஜரின் வாழ்க்கை வரலாற்றினை ‘காமராஜ்’என்ற பெயரில் திரைப்படமாகத் தயாரித்து வெளியிட்ட ரமணா கம்யூனிகேஷன்ஸ் நிறுவனம் தற்போது மக்கள் திலகம் எம். ஜி. ஆரின் வாழ்க்கை வரலாற்றினை மாபெரும் பொருட்செலவில் ‘எம். ஜி. ஆர்’ எனும் பெயரில் திரைப்படமாகத் தயாரித்து வருகிறது. இத்திரைப்படத்தில் எம்.ஜி .ஆரைப் போன்றே முகத்தோற்றம் கொண்ட பிரபல விளம்பரப்பட நாயகன் சதிஷ் குமார் எம். ஜி. ஆர் வேடத்தில் நடிக்கிறார் . எம். ஜி.ஆரின் மனைவி ஜானகி அம்மையாராக ரித்விகாவும், M .R . ராதாவாக பாலாசிங், இயக்குநர் பந்துலுவாக Y .G மகேந்திரன், எம். ஜி.ஆரின் அண்ணன் சக்கரபாணியாக மலையாள நடிகர் ரகு, பாய்ஸ் நாடகக் கம்பெனி உரிமையாளராக தீனதயாளன், உயிர் தொண்டனாக வையாபுரி மற்றும் பலர் நடிக்கின்றனர். ஒளிப்பதிவை எட்வின் சகாய் கையாள படத்தொகுப்பை அகமது கவனிக்கிறார். எம் . ஜி . ஆர் தனது திரைப்படத்தில் கதைக்கும் தனது கத...
சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் முதல் அரசியல் மேடை எங்கு தெரியுமா யார் சிலை திறக்கிறார் தெரியுமா

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் முதல் அரசியல் மேடை எங்கு தெரியுமா யார் சிலை திறக்கிறார் தெரியுமா

Latest News, Top Highlights
சென்னை அடுத்த வேலப்பன் சாவடி - பூந்தமல்லி நெடுஞ்சாலையில் உள்ள ஏ.சி.எஸ். மருத்துவக் கல்லூரியில் விழா ஏற்பாடுகள் தடபுடலாக நடக்கின்றன. விழாவில் மொரீஷியஸ் நாட்டு குடியரசு துணைத் தலைவர் பரமசிவம்பிள்ளை வையாபுரி கலந்துகொண்டு நூற்றாண்டு விழா கட்டடத்தை திறந்துவைக்கப்போகிறார். இலங்கை கல்வி அமைச்சர் வி.எஸ். ராதாகிருஷ்ணன், எம்.ஜி.ஆர். புகைப்பட கண்காட்சியைத் திறந்துவைக்கப்போகிறார். ரஜினி, எம்.ஜி.ஆரின் வெங்கலச் சிலையைத் திறந்துவைக்கப் போகிறார். அவரின் கையில், எம்.ஜி.ஆர். முதல்வராக இருந்தபோது, அவரது அமைச்சரவையில் இடம்பெற்றவர்கள்...அப்போது பணியாற்றிய ஐ.ஏ.எஸ். அதிகாரிகள், எம்.ஜி.ஆருடன் நடத்த நடிகர், நடிகைகள், எம்.ஜி.ஆரின் உறவினர்கள்...என்று முக்கியமானவர்களுக்கு எம்.ஜி.ஆர். விருதுகளை வழங்கப்போகிறார். அரசியல் வானில் ஜொலிக்கப்போகும் ரஜினிக்கு இந்த விழா ஒரு மகுடமாக இருக்கப்போகிறது " என்றார். இதே நேரத்...
எம். ஜி. ஆர் வாழ்க்கை வரலாறு படமாகும் எம். ஜி. ஆர்  படத்தின் பூஜை  இன்று மிக பிரமாண்டமாக நடந்தது

எம். ஜி. ஆர் வாழ்க்கை வரலாறு படமாகும் எம். ஜி. ஆர் படத்தின் பூஜை இன்று மிக பிரமாண்டமாக நடந்தது

Latest News
ரமணா கம்யூனிகேஷன்ஸ் சார்பாக மறைந்த முன்னாள் முதல்வர் எம். ஜி. ஆர். அவர்களின் வாழ்க்கை வரலாறு ‘எம். ஜி. ஆர்.’ என்னும் பெயரில் திரைப்படமாகத் தயாரிக்கப் படுகிறது. தற்போதைய துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் அவர்கள் தலைமையில் திருவள்ளூர் பாராளுமன்ற உறுப்பினர் டாக்டர். வேணுகோபால் மற்றும் அமைச்சர் . கே. பாண்டியராஜன் முன்னிலையில் முதல்வர் எடப்பாடி கே. பழனிச்சாமி அவர்கள் இத்திரைப்படத்தின் முதல்நாள் படப்பிடிப்பை துவக்கி வைத்தார். செய்தி, மக்கள் தொடர்புத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜு மற்றும் அமைச்சர்கள், பாராளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், திரைத்துறை பிரபலங்கள் இவ்விழாவில் கலந்து கொண்டனர். இத்திரைப்படத்தில் எம் ஜி ஆர் ஆக சதீஷ்குமார், பேரறிஞர் அண்ணாவாக இயக்குனர் எஸ். எஸ். ஸ்டேன்லி மற்றும் சிங்கம் புலி, பிளாக் பாண்டி, ஏ. ஆர். தீனதயாளன், முத்துராமன் மற்றும் பலர் நடிக்கின்றனர். முன்னாள் முதல்வர்கள் வி. என...
மக்கள் திலகம்  எம்.ஜி.ஆரின் வாழ்க்கை வரலாறு திரைப்படமாகிறது..!

மக்கள் திலகம் எம்.ஜி.ஆரின் வாழ்க்கை வரலாறு திரைப்படமாகிறது..!

Latest News
‘காமராஜ்’ திரைப்படத்தை தயாரித்த ரமணா கம்யூனிகேஷன்ஸ் சார்பாக புரட்சித் தலைவர், மக்கள் திலகம் எம்.ஜி.ஆரின் வாழ்க்கை வரலாறு திரைப்படமாகத் தயாரிக்கப்படுகிறது. தமிழக மக்களின், குறிப்பாக ஏழை, எளியோர், விளிம்பு நிலை மக்களின் இதயங்களில் அவதார நாயகனாக வாழ்ந்து மறைந்தவர் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் அவர்கள். இளமையில் நாடக நடிகராக இருந்தபோதே அரசியலில் அதீத ஆர்வம் கொண்டவராக இருந்தார் எம்.ஜி.ஆர்., காங்கிரஸின் மீது பெரும் பற்று கொண்டவராகவும், தேசியத்தின் மீது அக்கறை கொண்டவராகவும் இருந்தார். அந்நாட்களில் அவர் கதர் வேஷ்டி சட்டைகள் மட்டுமே அணிந்தார். திரைத்துறையில் அவர் உச்ச நட்சத்திரமாக உயர்ந்தபோது அவரது புகழையும், கவர்ச்சியையும் பயன்படுத்திக் கொள்ள திட்டமிட்ட திராவிட முன்னேற்றக் கழகம் அவரைத் தன்பால் ஈர்த்துக் கொண்டது. அண்ணாவால் ஈர்க்கப்பட்டு திராவிட முன்னேற்றக் கழகத்தில் இணைந்தவர்.. தமது திரைப்பட...
46 வருடங்களுக்குப் பின் மீண்டும் வருகிறார், ‘மாஸ் ஹிட்’ “மாட்டுக்கார வேலன்”.

46 வருடங்களுக்குப் பின் மீண்டும் வருகிறார், ‘மாஸ் ஹிட்’ “மாட்டுக்கார வேலன்”.

Latest News
46 வருடங்களுக்குப் பின் மீண்டும் வருகிறது புரட்சித்தலைவரும், புரட்சித்தலைவியும் ஜோடியாக நடித்து வெள்ளி விழா கண்ட ஜனரஞ்சக திரைக்காவியம், மாட்டுக்கார வேலன். புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர்., இரட்டை வேடங்களில் நடித்த படம் என்ற பெருமையையும், கவியரசர் கண்ணதாசன் மற்றும் வாலிபக்கவிஞர் வாலியின் வரிகளில் அமைந்த தித்திக்கும் பாடல்களையும் கொண்ட காவியத் திரைப்படம் என்ற பெருமையையும் ஒரு சேர பெற்ற படம், “மாட்டுக்கார வேலன்”. ப. நீலகண்டன் இயக்கத்தில் 1970-ல், எம்.ஜி.ஆர், ஜெயலலிதா, லட்சுமி, அசோகன், வி.கே.ராமசாமி, சோ மற்றும் பலர் நடித்த மாட்டுக்கார வேலன் திரைப்படத்திற்கு இசை அமைத்தவர் ‘திரை இசைத் திலகம்’ கே.வி.மகாதேவன். கிட்டத்தட்ட 46 வருடங்களுக்குப் பின் மீண்டும் ரசிகர்களை மகிழ்விக்க டிஜிட்டல் தொழில்நுட்பத்துடன் புதுப்பிக்கப்பட்டு, மெருகேற்றப்பட்ட வண்ணக்கலவையில், 5.1 ஒலி அமைப்பில், சினிமாஸ்...