
ரஜினிகாந்த் நடித்திருக்கும் ‘காலா’, ‘2.ஓ’ ஆகிய படங்கள் ரிலீஸ் ஆகக் காத்திருக்கும் நிலையில், ரஜினி நடிக்கும் அடுத்த படத்தின் அறிவிப்பு வெளியாகியுள்ளது.
ரஜினி நடிக்கவிருக்கும் அடுத்த படத்தை ‘பீட்சா’, ‘ஜிகர்தண்டா’ உள்ளிட்ட படங்களின் இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் இயக்குகிறார்.
இந்தப் படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. ஏற்கெனவே, ஷங்கர் இயக்கிய ‘எந்திரன்’ படத்தைத் தயாரித்த சன் பிக்சர்ஸ் இரண்டாவது முறையாக ரஜினியுடன் இணைந்துள்ளது.
2012-ம் ஆண்டு வெளிவந்த ‘பீட்சா’ படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் கார்த்திக் சுப்புராஜ். ‘ஜிகர்தண்டா’ படத்தின் மூலமும் பெரிதும் பேசப்பட்டார். அடுத்து, விஜய் சேதுபதி, எஸ்.ஜே.சூர்யா ஆகியோர் நடிக்க ‘இறைவி’ படத்தை இயக்கினார். அந்தப் படம் அவருக்கு சரியான படமாக அமையவில்லை
அடுத்து பிரபுதேவா நடிக்கும் மெர்குரி படத்தை இயக்கி வருகிறார். இந்நிலையில், ரஜினிகாந்த்தின் அடுத்த படத்தை இயக்கும் வாய்ப்பைப் பெற இவர் உள்பட சில இயக்குநர்களிடையே கடும் போட்டி இருந்து வந்தது.
இந்நிலையில், ரஜினிகாந்த் படத்தை இயக்கும் வாய்ப்பு கார்த்திக் சுப்புராஜுக்கு கிடைத்துள்ளது. சன் பிக்சர்ஸ் தயாரிக்க உள்ள இந்தப் படத்தில் ரஜினிகாந்த் கதாநாயகனாக நடிக்கிறார். இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு சற்று முன்பு வெளியானது.
ஏற்கெனவே சன் பிக்சர்ஸ், விஜய் நடிப்பில் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கும் படத்தைத் தயாரித்து வருகிறது. அந்தப் படத்திற்குப் பிறகு ரஜினிகாந்த் நடிக்கும் படத்தையும் தயாரிக்கிறது. அடுத்தடுத்த படங்களின் மூலம் மீண்டும் தீவிர சினிமா தயாரிப்பு பணிகளில் இறங்கியிருக்கிறார் கலாநிதி மாறன்
ரஜினிகாந்த் நடித்த ‘எந்திரன்’ படத்திற்குப் பிறகு சன் பிக்சர்ஸ் நிறுவனமும், ரஜினியும் மீண்டும் இணையும் படம் இது. ரஜினிகாந்த் நடித்துள்ள காலா, 2.0 படங்கள் வெளிவராத நிலையில் அதற்குள் ரஜினியின் அடுத்த பட அறிவிப்பு வெளிவந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
ரஜினிகாந்த் தீவிர அரசியலில் இறங்கவிருக்கும் நிலையில் இந்தப் புதிய பட அறிவிப்பு திரையுலகத்திலும், அரசியல் களத்திலும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. அப்படியானால், இந்தப் படம் முடியும் வரை அரசியலுக்கு வரமாட்டாரா எனும் கேள்வியும் எழுந்துள்ளது.
அதற்கான விடையான படமும் இந்த படம் இருக்குமார் ஐது ஒரு அதிரடி படம் மட்டும் இல்லாமல் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் கொள்கைகளை சொல்லும்ஒரு படமாகவும் இருக்கும் சில தகவல்கள் கசிந்துள்ளது அதேபோல ரஜினிகாந்த் இந்த படத்தையும் அரசியல் வேலைகளையும் திட்டம் போட்டு செய்வார் என்று ஒரே நேரத்தில் செய்வார் தீவிர அரசியல் நோக்கு பார்வை ரஜினிகாந்த் அவர்களிடம் உள்ளது வாழவைத்த தமிழ் மக்களுக்கு நல்லது செய்வதற்கே அரசியல் என்றும் ரஜினிகாந்த் வட்டாரத்தில் பேசபடுகிறது
