Wednesday, June 24
Shadow

கேமராமேன் ரவியாதவுக்கு ‘ரஞ்சன்’ படக்குழுவின் இனிய சர்ப்ரைஸ் கொண்டாட்டம்!

கேமராமேன் ரவியாதவுக்கு ‘ரஞ்சன்’ படக்குழுவின் இனிய சர்ப்ரைஸ் கொண்டாட்டம்!

டாப் ஸ்டார் பிரஷாந்த் நடிப்பில் உருவாகி வரும் “ரஞ்சன்” திரைப்படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இயக்குனர், தயாரிப்பாளர் மற்றும் நடிகரான தியாகராஜன் இயக்கும் இப்படம் சமூக அக்கறை கொண்ட கதைக்களத்தால் ஏற்கனவே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

போக்சோ சட்டத்தின் முக்கியத்துவத்தையும் அதன் தாக்கத்தையும் இளைஞர்களுக்கு உணர்த்தும் வகையில் உருவாகும் இப்படத்தின் கோர்ட் காட்சிகள் தற்போது தீவிரமாக படமாக்கப்பட்டு வருகின்றன. இப்படியான பரபரப்பான சூழலிலேயே படத்தின் ஒளிப்பதிவாளரும் பிரபல தயாரிப்பாளருமான ரவியாதவின் பிறந்த நாள் படக்குழுவினரால் சிறப்பாக கொண்டாடப்பட்டது.

எந்த முன் அறிவிப்பும் இல்லாமல் படப்பிடிப்பு தளத்திற்கு பெரிய கேக் கொண்டு வரப்பட்டு, நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் முன்னிலையில் ரவியாதவுக்கு இனிய சர்ப்ரைஸ் வழங்கப்பட்டது. அனைவரின் கைதட்டல்களுக்கும் நடுவே கேக் வெட்டி மகிழ்ந்த ரவியாதவுக்கு படக்குழுவினர் வாழ்த்துகளை தெரிவித்தனர். இந்த நிகழ்வு படப்பிடிப்பு தளத்தில் உற்சாகமான தருணமாக மாறியது.

“ரஞ்சன்” திரைப்படத்தில் சத்யராஜ், தேவயானி, ஆர்.கே. சுரேஷ், மோகன்ராம், ஆதிரா, மானஸ்வி, ஆதேஷ்பாலா, சந்தோஷ் பிரபாகர் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். மேலும், தயாரிப்பாளர் கதிரேசனின் மகன் ஹரியும், நடிகை தேவயானியின் மகள் பிரியங்காவும் இளம் ஜோடியாக இப்படத்தின் மூலம் அறிமுகமாகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

சமூகத்தில் விழிப்புணர்வை ஏற்படுத்தும் கருத்துடன் உருவாகும் “ரஞ்சன்” திரைப்படம் ரசிகர்களிடையே தனி எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது.

 

‘Ranjan’ Team Celebrates Cinematographer Ravi Yadav’s Birthday with a Surprise Cake-Cutting Event on Sets

The shooting of “Ranjan,” starring Top Star Prashanth and directed by actor-producer-director Thiagarajan, is progressing at a brisk pace. The film has already created strong expectations among audiences for its socially relevant storyline.

The movie is said to highlight the seriousness and impact of the POCSO Act among youngsters, and intense courtroom sequences are currently being filmed. Amid this busy shooting schedule, the team surprised renowned cinematographer and producer Ravi Yadav with a special birthday celebration on the sets.

In a heartwarming moment, a huge cake was brought onto the set without prior notice, and the celebration took place in the presence of the film’s cast and technical crew. Ravi Yadav cut the cake amidst loud applause and warm wishes from everyone, turning the shoot into a memorable and cheerful occasion.

The film features an ensemble cast including Sathyaraj, Devayani, R.K. Suresh, Mohan Ram, Aadhira, Manasvi, Adesh Bala, and Santhosh Prabhakar in prominent roles.

Adding to the excitement, producer Kadhiresan’s son Hari and actress Devayani’s daughter Priyanka are making their debut as the young lead pair in the film.

With a socially impactful message at its core, “Ranjan” is expected to create a strong impression among audiences and spark meaningful conversations in society.