Friday, May 23
Shadow

தங்கமகன் மாரியப்பனின் வாழ்க்கையை படமாக்கும் ஐஸ்வர்யா தனுஷ்!

தமிழ் சினிமாவின் முழு ஆக்கிரமைப்பு தனுஷ் குடும்பம் தான் என்று சொல்லணும் தனுஷ் மற்றும் அவரின் மனைவி மச்சினிச்சி இவர்கள் இயக்கி நடிக்கும் படங்கள் மட்டுமே கிட்டத்தட்ட் ஐந்து படங்கள் மேல உள்ளது இருந்தும் எல்லாம் நல்ல விஷயம் என்று தான் சொல்லணும் சண்டை பயிற்சியாளர்கள் படும் வேதனை இப்ப ஒலிம்பிக்யில் தங்கம் வென்ற மாரியப்பன் வாழ்கை வரலாறு பெருமையான விஷயம் அதுமட்டும் இல்லாமல் பாராட்டனும் .

ரியோ நகரில் நடைபெற்ற பாரா ஒலிம்பிக்கில் உயரம் தாண்டுதல் போட்டியில் தங்கம் வென்று இந்திய நாட்டிற்கும், தமிழகத்திற்கும் பெருமைத் தேடித் தந்தவர் மாரியப்பன் தங்கவேலு. தமிழகத்தை சேர்ந்த மாரியப்பன், ஏழ்மையான குடும்பத்தில் பிறந்ததுடன், தனது 5 வயதிலே விபத்து ஒன்றில் காலை இழந்து அதன்பிறகு மன உறுதியாலும், விடா முயற்சியாலும் கடின உழைப்பாலும் ஒலிம்பிக்கில் தங்கம் வென்று அசத்தினார்.

தற்போது அவருடைய வாழ்க்கை வரலாற்றை படமாக எடுக்கவுள்ளார் ரஜினிகாந்தின் மகள் ஐஸ்வர்யா தனுஷ்.
படத்திற்கு ‘மாரியப்பன்’ என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது. புத்தாண்டை முன்னிட்டு படத்தின் முதல் போஸ்டரை பாலிவுட்டின் முன்னணி நடிகரான ஷாருக்கான் டுவிட்டர் மூலம் வெளியிட்டுள்ளார். மாரியப்பன் தங்கவேலு பிறந்தது முதல் அவர் பாரா ஒலிம்பிக்கில் தங்கம் வென்றது வரையிலான சம்பவங்களை காட்சிப்படுத்தி இந்த படத்தை உருவாக்க இருக்கிறாராம் ஐஸ்வர்யா தனுஷ்.

Leave a Reply