
இயக்குனர் ஹரி கடந்த 2003ம் ஆண்டு சாமி முதல் பாகம் எடுத்த போதே இந்த படத்தின் இரண்டாம் பாகம் எடுக்க முடிவு செய்து விட்டார். இவர் ஏற்கனவே நடிகர் சூர்யாவை வைத்து கடந்த 2010ம் ஆண்டில் சிங்கம் படத்தை எடுத்தார். அந்த படத்தின் கதையில் துரைசிங்கமாக சூர்யா நடித்திருந்தார். இதே போன்று சாமி முதல் பாகம் முடியும் போது சாமியின் வேட்டை தொடரும் என்று குறிப்பிடப்பட்டிருந்தது. சாமி முதல் பாகம் பெரிய ஹிட் படமாக மாறியதை தொடர்ந்தும், சிங்கம் படத்திற்கு ஏற்பட்ட வரவேற்ப்பை தொடர்ந்தும் இந்த படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்க ஹரி முடிவு செய்துள்ளார்.
முதல் பாகத்தில் இடம் பெற்ற கேரக்டர்ளை வைத்து இந்த பாகத்தை எடுக்க முடிவு செய்யாத இயக்குனர், இதில் ஆறுச்சாமி (விக்ரமை) கொன்று விட்டு, அதே போன்ற ஒரு போலீஸ்காரர் கேரக்டர் ராம் சாமி (விக்ரம்) இந்த படத்தில் கொண்டு வந்துள்ளார். மற்ற கேரக்டர்களை முதல் பாகத்தில் உள்ளது போன்று உருவாக்கியுள்ளார். இந்த படத்தில் இடம் பெற்றுள்ள ஒரே வித்தியாசம் விக்ரம் மீசை வைத்துள்ளது மட்டுமே.
கரு: சமூக அமைதியை சீர்குலைக்கும் ரௌடிகளை பின்னி பெடலெடுக்கும் ஆறிச்சாமியின் பவர்ஃபுல் பெர்மான்ஸ் தான் இந்த ’சாமி- 2’
இப்போது படத்தின் கதையை பற்றி பார்க்கலாம். முதல் பாகத்தில் வில்லன் (கோட்டா சீனிவாச ராவ்வை) கொலை செய்த ஹீரோ பழி வாங்க வில்லனின் மகன் ராவண பிச்சை(பாபி சிம்ஹா) இலங்கையில் இருந்து இந்தியா வருகிறார். தனது தந்தையை ஆறுசாமி கொலை செய்ததை தொடர்ந்து, அவரையும் அவரது மனைவி (ஐஸ்வரியா ராஜேஷ்) இருவரையும் கொலை செய்ய முயற்சிகிறார். இது மட்டுமின்றி இவர் இந்தியா முழுவதும் மணி லாவண்டரி நெட்வோர்க அமைந்து வரும் ராவண பிச்சை, ராம் சாமியை தனது தந்தையை கொன்றதற்காக பழி வாங்க முயல்கிறார். ராம் சாமி வில்லனை எப்படி சமாளித்தார், வில்லனிடம் இருந்து தனது குடும்பத்தை எப்படி காப்பாற்றினாரா? என்பது படத்தின் கதை.
இயக்குநர் ஹரி மற்றும் விக்ரம் கூட்டணியில் உருவாகியுள்ள ’சாமி 2’ திரைப்படம் பெரிய எதிர்பார்ப்புக்கிடையில் இன்று உலகம் முழுவதும் வெளிவந்துள்ளது. விக்ரம் ரசிகர்களுக்கு இது ஒரு கொண்டாட்டமான நாளாக அமைந்துள்ளது.
15 வருடங்கள் பிறகு மீண்டும் சேர்ந்த வெற்றி கூட்டணி மீண்டும் தன் வெற்றியை தக்கவைத்து கொண்டது என்று கூறலாம் படம் முழுவதும் இயக்குனர் ஹரி பாணி செம ஸ்பீட் காட்சிக்கு காட்சி விறுவிறுப்பு
இயக்குனர் ஹரியின் சாமி முதல் பாகத்தில் விக்ரமின் வழக்கமான அதிரடி நடிப்பு, வலுவான வில்லன், மசாலா படங்களுக்கு தேவையான அனைத்து விஷயங்கள் மட்டுமல்லாமல், இனிமையான பாடல்கள் ரொமாட்டிக் சீன்கள், காமெடிகளும் முதல் பாகத்தில் இடம் பெற்றது.
’சாமி- 2’ படத்தில் கீர்த்தி சுரேஷ், ஐஸ்வர்யா ராஜேஷ் கதாநாயகிகளாக நடித்துள்ளனர். மேலும் இந்த படத்தில் பிரபு, ஜான் விஜய், ஓ.கே.சுந்தர், பாபி சிம்ஹா, சஞ்சீவ், இமான் அண்ணாச்சி, உமா ரியாஸ் கான் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
முதல் பாகத்திற்கு எந்தவிதத்திலும் குறைச்சல் இல்லாமல், சாமி 2 திரைப்படமும் அதிரடியில் துவம்சம் செய்யும் படமாக தயாராகியுள்ளது. ’சாமி ஸ்கொயர்’ படத்தின் டிரெய்லர் மற்றும் பாடல்கள் சமூகவலைதளங்களில் வெளியாகி வரவேற்பு பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது
மொத்தத்தில் பயர் Rank 3.5/5
