’சாமி ஸ்கொயர்’ – திரைவிமர்சனம் (பயர்) Rank 3.5/5
இயக்குனர் ஹரி கடந்த 2003ம் ஆண்டு சாமி முதல் பாகம் எடுத்த போதே இந்த படத்தின் இரண்டாம் பாகம் எடுக்க முடிவு செய்து விட்டார். இவர் ஏற்கனவே நடிகர் சூர்யாவை வைத்து கடந்த 2010ம் ஆண்டில் சிங்கம் படத்தை எடுத்தார். அந்த படத்தின் கதையில் துரைசிங்கமாக சூர்யா நடித்திருந்தார். இதே போன்று சாமி முதல் பாகம் முடியும் போது சாமியின் வேட்டை தொடரும் என்று குறிப்பிடப்பட்டிருந்தது. சாமி முதல் பாகம் பெரிய ஹிட் படமாக மாறியதை தொடர்ந்தும், சிங்கம் படத்திற்கு ஏற்பட்ட வரவேற்ப்பை தொடர்ந்தும் இந்த படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்க ஹரி முடிவு செய்துள்ளார்.
முதல் பாகத்தில் இடம் பெற்ற கேரக்டர்ளை வைத்து இந்த பாகத்தை எடுக்க முடிவு செய்யாத இயக்குனர், இதில் ஆறுச்சாமி (விக்ரமை) கொன்று விட்டு, அதே போன்ற ஒரு போலீஸ்காரர் கேரக்டர் ராம் சாமி (விக்ரம்) இந்த படத்தில் கொண்டு வந்துள்ளார். மற்ற கேரக்டர்களை முதல் பாகத்தில் உள்ளது...