Thursday, January 16
Shadow

தீபாவளி ரிலீசுக்கு தயாராகி விட்ட சைத்தான்

இந்தியா பாகிஸ்தான் படம் தவிர தான் நடித்த மூன்று படங்களிலுமே சீரிசான கதைகளில்தான் நடித்துள்ளார் விஜய் ஆண்டனி. அந்த வகையில், நான், சலீம், பிச்சைக்காரன் போன்ற சீரியஸ் கதைகள்தான் அவருக்கு பொருத்தமானவை என்பதை உறுதிப்படுத்தின. அதனால் இப்போது சைத்தான், எமன் என்ற இரண்டு படங்களிலுமே அதிரடியான சீரியஸ் நாயகனாக உருவெடுத்துள்ளார் விஜய் ஆண்டனி. அந்த வகையில், சைத்தான் படம் கணவன்-மனைவி பிரச்சினையிலும், எமன் அரசியல் கதையிலும் உருவாகியுள்ளன.

இதில் சைத்தான் படம் தீபாவளி ரிலீசுக்கு தயாராகி விட்டது. இந்த படத்தில் சாப்ட்வேர் எஞ்சினியராக நடித்துள்ள விஜய் ஆண்டனி, மனரீதியாக எந்தெந்த வகையில் பாதிக்கப்படுகிறார். இதனால் அவருக்கும், அவரது மனைவியாக நடித்துள்ள அருந்ததி நாயருக்குமிடையே என்னென்ன பிரச்சினைகள் ஏற்படுகிறது என்பதுதான் சைத்தான் படமாம். அந்த வகையில், இந்த படம் இதுவரை விஜய் ஆண்டனி நடித்துள்ள படங்களை விட படு சீரியசான படமாக இருக்குமாம்.

மேலும், சீரியஸான கதையில் காமெடி காட்சிகள் இருந்தால் அது கதையோட்டத்துக்கு ஸ்பீடு பிரேக்காகி விடும் என்பதால், விஜய் ஆண்டனி அவரது நண்பராக நடித்துள்ள லொள்ளுசபா சாமிநாதன் ஆகியோர் சம்பந்தப்பட்ட சில காமெடி காட்சிகளையும் இப்போது கத்தரித்து விட்டார்களாம். அதனால் சைத்தான் பியூர் சீரியஸ் படமாகியிருக்கிறதாம்.

Leave a Reply