
மலையாள படத்தின் முன்னணி ஹீரோ பகத் பாசில், நடிகைகள் சமந்தா, ரம்யா கிருஷ்ணன், காயத்ரி, இயக்குனர் மிஷ்கின் உட்பட பலர் நடித்துள்ளனர். இந்தப் படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.
சூப்பர் டீலக்ஸ்’ திரைப்படத்தின் அனைத்து பணிகளும் முடிவடைந்து ரிலீசுக்கு தயாராக உள்ள நிலையில் ‘YNOTX’ நிறுவனம் படத்தின் விநியோகத்தைக் கைப்பற்றியுள்ளது. இதனால் படம் விரைவில் திரைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கடந்த ஆண்டு அக்டோபர் மாதத்தில் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டிருந்தது. தற்போது படத்தின் செகண்ட் லுக் போஸ்டர் நாளை வெளியாகும் என்று நடிகை சமந்தா தெரிவித்துள்ளார்.இந்தப் படம் விஜய் சேதுபதியுடன் சமந்தா இணைந்து நடிக்கும் முதல் படம் என்பதும் குறிப்பிடத்தக்கது
