
விஷால் சமந்தா முதல் முறையாக இணையும் படம் இரும்பு திரை இந்த படத்தின் டீஸர் வெளியீட்டு விழா நேற்று மிக பிரமாண்டமாக சென்னையில் உள்ள ஒரு நட்சத்திர ஹோட்டலில் நடைபெற்றது இதில் சினிமாவின் முக்கிய வி,ஐ.பி.கள் கலந்துகொண்டனர்
விஷால் தயாரித்து நடிக்கும் படம் ‘இரும்புத்திரை’. அர்ஜுன் வில்லனாக நடிக்கும் இப்படத்தில் ஹீரோயினாக சமந்தா நடிக்கிறார். வரும் ஜனவரி மாதம் வெளியாக இருக்கும் இப்படத்தின் டீசர் வெளியீட்டு விழா நேற்று சென்னையில் நடைபெற்றது.
இதில் விஷால் உள்ளிட்ட படக்குழுவினர் பங்கேற்க, நடிகை சமந்தாவும் கலந்துக் கொண்டார். திருமணத்திற்கு பிறகு சமந்தா தமிழ் சினிமாவில் பங்கேற்கும் முதல் நிகழ்ச்சி இது தான்.
நிகழ்ச்சியில் பேசிய சமந்தா, “விஜய் அல்லது சூர்யா என்றால் காலையில் முதல் முறை பார்க்கும் போது நான் பணிவாக வணக்கம் சொல்வேன், ஆனால் விஷால் என்றால் அது தலைகீழாக இருக்கும். விஷாலுககு என்னை விட வயது குறைவுதான்” போல தோன்றும் ஆகவே செட்குள்ளே போகும் போதே ஒரு கலகலப்பு இருக்கும் என்று கூறினார். இந்த படம் எனக்கு ஒரு பெரிய பாசிட்டிவ் எனர்ஜி கொடுத்த படம் அதே போல நான் ஆந்திரா மருமகள் தான் என் பொறந்த வீடு சென்னை பல்லவராம் தான் என்று கூறினார்
