லிங்குசாமி இயக்கத்தில் விஷால், கீர்த்தி சுரேஷ், ராஜ்கிரண், வரலட்சுமி சரத்குமார் உள்ளிட்டோர் நடித்துள்ள படம் சண்டக்கோழி 2. இந்த படத்தில் வரலட்சுமி வில்லியாக நடித்துள்ளார்.
இந்நிலையில் படத்தின் 2வது ட்ரெய்லர் இன்று வெளியிடப்பட்டுள்ளது. ட்ரெய்லரில் ராஜ் கிரண் கெத்து காட்டுகிறார். மனிதருக்கு வயதே ஆகாது போல. கீர்த்தி சுரேஷ் வழக்கம் போன்று வந்து ஹீரோவை காதலிக்கிறார், வம்பிழுக்கிறார். உன்னை கட்டிக்கிறேன், அவரை வச்சிக்கிறேன் என்கிறார் கீர்த்தி. தப்பில்ல தப்பில்ல. ஆம்பளங்க வீசினால் தான் அருவாள் வீசும்னு நினைச்சியா பொம்பளங்க வீசினாலும் வீசும் என்று மாஸ் காட்டியுள்ளார் வரலட்சுமி.
விஷால் ஒரு பக்கம் தெறிக்க விடுகிறார். திருவிழாவில் புலி வேஷம் போடலாம் ஆனால் புலிக்கு முன்னாடியே வேஷம் போடக் கூடாது என்று விஷாஸ் பன்ச் விடுகிறார். ட்ரைலரிலே இப்படி மாஸ் காட்டும் எல்லோரும் படம் எப்படி இருக்கும் விஷால் பேச்சுக்கு தான் இந்த படம் மிரட்டும் என்று சொன்னார் என்று நினைத்தால் உண்மையில் ட்ரைலர் பொறி கிளப்புகிறது லிங்குசாமி கத்துகிட்ட மொத்த வித்தையும் உண்மையில் காண்பிதுள்ளார் என்று தான் சொல்லணும்