Tuesday, April 21
Shadow

விஜய் நாயகியுடன் ஜோடி சேரும் சசிகுமார்

தொடர் தோல்வியால் துவண்டு இருக்கும் சசிகுமார் கௌதம் மேனன் படத்தில் நடிக்க ஆரம்பித்தார் பின்னர் மீண்டும் சமுத்திரகனியுடன் கூட்டு வைத்தார் தற்போது மேலும் தன்னை எப்படியாவது நிலை நிறுத்த வேண்டும் என்று முன்னணி நாயகியுடன் ஜோடி சேருகிறார்

எஸ்.ஆர்.பிரபாகரன் இயக்கத்தில், சசிகுமார் நடித்து ரிலீஸான படம் ‘சுந்தர பாண்டியன்’. 2012-ம் ஆண்டு இந்தப் படம் ரிலீஸானது. இந்தப் படத்துக்குப் பிறகு ‘இது கதிர்வேலன் காதல்’ மற்றும் ‘சத்ரியன்’ ஆகிய படங்களை இயக்கினார் எஸ்.ஆர்.பிரபாகரன். இந்த இரண்டு படங்களுமே சரியாகப் போகவில்லை.

எனவே, மறுபடியும் தன்னுடைய முதல் பட ஹீரோவான சசிகுமாருடன் இணைய இருக்கிறார் எஸ்.ஆர்.பிரபாகரன். இந்தப் படத்துக்கு ‘கொம்பு வச்ச சிங்கம்’ எனத் தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. ‘பிக் பாஸ்’ ஆரவ், சூரி, யோகிபாபு ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடிக்க இருக்கின்றனர்.

இந்தப் படத்தில் ஹீரோயினாக நடிக்க கீர்த்தி சுரேஷ் ஒப்பந்தம் செய்யப்பட்டிருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. விரைவில் தொடங்க இருக்கும் இதன் ஷூட்டிங், காரைக்குடி மற்றும் பொள்ளாச்சிப் பகுதிகளில் நடைபெற இருக்கிறது.

தற்போது ‘சாமி ஸ்கொயர்’ ரிலீஸில் பிஸியாக இருக்கும் கீர்த்தி சுரேஷுக்கு, அடுத்து விஜய்யுடன் நடித்துள்ள ‘சர்கார்’ ரிலீஸ் காத்திருக்கிறது. இப்படி அடுத்தடுத்த கமிட்மென்ட்களால் எப்போதும் பிஸியாகவே இருக்கிறார் கீர்த்தி சுரேஷ்.