
உதயநிதி சமீபகாலமாக தான் நடிக்கும் படத்தின் கதையுளும் சரி இயக்குனர்களும் சரி மிக உன்னிப்பாக கவனித்து பயணிக்கிறார் காரணம் ஒன்று அரசியல் பிரவேசம் அதோடு மக்களின் நாயகனாக வேண்டும் என்ற எண்ணமும் தான் முக்கிய காரணம் அதன் வெளிப்பாடு தான் இயக்குனர் சீனு ராமசாமியின் கண்ணே கலைமானே
உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘கண்ணே கலைமானே’. சீனு ராமசாமி இயக்கியுள்ள இந்தப் படத்தில், தமன்னா ஹீரோயினாக நடித்துள்ளார். வசுந்தரா கஷ்யப், வடிவுக்கரசி, ஷாஜி ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ள இந்தப் படத்தில், அனைத்துப் பாடல்களையும் வைரமுத்து எழுதியுள்ளார். உதயநிதியின் ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் ‘கண்ணே கலைமானே’ படத்தைத் தயாரித்துள்ளது.
மதுரை, வாடிப்பட்டியைப் பின்னணியாகக் கொண்டு எடுக்கப்பட்ட இந்தப் படத்தின் படப்பிடிப்பு, கடந்த மார்ச் மாதம் முடிவுற்றது. போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வந்த நிலையில், தற்போது அந்தப் பணிகள் முடிவடைந்துள்ளன.
படத்தைப் பார்த்த சென்சார் போர்டு உறுப்பினர்கள், படத்துக்கு ‘யு’ சான்றிதழ் வழங்கியுள்ளனர். விரைவில் படத்தை வெளியிடுவதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன.
