
கோலிவுட்டில், திறமையான இளம் நடிகையருக்கு கடும் பஞ்சம் நிலவுகிறது. கோடிகளில் சம்பளம் கேட்கும் நடிகையர் எல்லாம், 30 வயதை கடந்து விட்ட நிலையில், நடிப்பு, நடனம், கவர்ச்சி ஆகியவற்றில் திறமையான நடிகையரை தேடி, இயக்குனர்களும், தயாரிப்பாளர்களும் படையெடுக்கின்றனர்.

இந்த வாய்ப்பை சரியாக பயன்படுத்த முடிவு செய்து, முழுவீச்சில் கோலிவுட் களத்தில் குதித்துள்ளார், வனமகன் படத்தில் நடித்த சாயீஷா. கடைக்குட்டி சிங்கம், கஜினிகாந்த், ஜுங்கா ஆகிய படங்களில் நடித்து வரும் அவர், மேலும் சில படங்களிலும் ஒப்பந்தமாகியுள்ளார்.
நடனத்தில், அபார திறமை பெற்றவர் என்பதால், அதை பயன்படுத்தி, முன் வரிசைக்கு வர முயற்சித்து வருகிறார். இதனால், தெலுங்கு, ஹிந்தி படங்களில் வாய்ப்பு தேடுவதை, தற்காலிகமாக மூட்டை கட்டி வைத்துள்ளார்.இன்று எல்லா முன்னணி நடிகைகளும் தனக்கென முக்கியத்துவம் வாய்ந்த கதாபாத்திரத்தில் நடிக்க சென்று விட்டனர்.


இன்று கவர்ச்சிக்கும் இளைய ஹீரோக்களுடன் ஜோடி சேர நாயகி பஞ்சம் வேறு ஆகவே இவர் அந்த இடத்தை நிருப்புவாறா அதோடு கஜினிநிகாந்த் படத்தில் நடிப்பதால் கவர்ச்சி நடிகை என்ற இடத்தையும் சேர்த்து தக்கவைப்பரா என்று பொறுத்திருந்து பார்க்கணும்.
