Wednesday, June 24
Shadow

விஜய்க்காக 8 வருடங்களாக காத்திருக்கும் பிரபு

சமீபத்தில் பத்திரிக்கையாளர்களை மீன்குழம்பும் மண்பானையும் படத்துக்காக சந்தித்த பிரபு அந்த படம் சம்ந்தமாக பேசும்போது பத்திரிக்கையாளர்கள் நீங்கள் விஜய் படத்தை தயாரிக்க போவதாக செய்திகள் வருகிறது அதை பற்றி சொல்லுங்கள் என்றபோது அதற்கு அவர் கூறியது

அஜித்தை வைத்து அசல் படம் தயாரித்த கையோடு விஜய்யையும் வைத்து ஒரு படம் தயாரிக்க ஆசைப்பட்டார் பிரபு. இதுசம்பந்தமாக அப்போதே விஜய்யை தொடர்புகொண்டு அவர் பேசியுள்ளார். சிவாஜி குடும்பத்தின்மீது மிகுந்த அன்புகொண்ட விஜய் இதற்கு உடனடியாக ஓகே சொல்லிவிட்டார்.

ஆனால் எப்போ, யாருடன் படம் பண்ணலாம் என்பதை மட்டும் இன்றுவரை அவர் உறுதியாக சொல்லவில்லை. இதனால் விஜய் இப்போ ஓகே சொல்வார் அப்போ ஓகே சொல்வார் என 8 வருடங்களாக காத்திருக்கிறாராம் பிரபு. எனினும் விஜய் எப்போ ஓகே சொன்னாலும் அவரை வைத்து படம் பண்ண அவர் தயாராகவே இருக்கிறார்.

Leave a Reply