Tuesday, May 20
Shadow

தெறி, கபாலி வழியில் பிரம்மாண்டமாக வெளியாகும் சூர்யாவின் சி3!

ஹரி இயக்கத்தில் சூர்யா நடித்திருக்கும் சி3 படம் பிப்ரவரி 9-ம் தேதி வெளியாகவுள்ளது. முதல் இரு பாகங்கள் மாபெரும் வெற்றி பெற்றிருப்பதால் இந்த படத்துக்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு உள்ளது.

சூர்யா ஜோடியாக அனுஷ்கா நடித்திருக்கும் இப்படத்தில் ஸ்ருதி ஹாசன், சூரி, ரோபோ ஷங்கர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். மலேசியாவில் இப்படத்தை Malik streams corporation நிறுவனம் வெளியிடவுள்ளது. இதற்கு முன்பு தெறி, கபாலி படங்களையும் இதே நிறுவனம் மலேசியாவில் வெளியிட்டது என்பது குறிப்பிடத்தக்கது. சி3 படம் மலேசியாவில் நூற்றுக்கணக்கான திரையரங்குகளில் வெளயாகிறது.

அதே போல் தமிழகம் , ஆந்திரா மற்றும் தெலுங்கான ஆகிய மூன்று மாநிலங்களில் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் கிட்டத்தட்ட 9௦௦ திரையரங்கில் வெளியாகிறது.

இந்த படத்தின் பைரசி பிரச்சனைக்காக தயாரிப்பாளர் ஞானவேல் வேல் ராஜ் நீதி மன்றம் சென்றுள்ளார் ஆனால் நீதி மன்றம் இவர் கொடுத்த புகார் வழக்கை தள்ளுபடி செய்துள்ளார் . காபளிக்கு ஒரு நீதி சி 3க்கு ஒரு நீதியா என்று எல்லோரும் பேசி வருகிறார்கள் .

Leave a Reply