Saturday, November 7
Shadow

“ரசிகர்களை சிரிக்கவும், கைதட்டவும் வைக்கும் படம் ‘சிக்மா’!” – நடிகர் சந்தீப் கிஷன்

“ரசிகர்களை சிரிக்கவும், கைதட்டவும் வைக்கும் படம் ‘சிக்மா’!” – நடிகர் சந்தீப் கிஷன்

சென்னை:
லைகா புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள ‘சிக்மா’ திரைப்படம் ரசிகர்களுக்கு புதுவிதமான ஆக்‌ஷன் காமெடி அனுபவத்தை வழங்கும் என நடிகர் சந்தீப் கிஷன் தெரிவித்துள்ளார்.

‘சிக்மா’ பட விழாவில் கலந்து கொண்டு பேசிய சந்தீப் கிஷன், படக்குழுவினருக்கும், தன்னை தொடர்ந்து ஆதரித்து வரும் ரசிகர்களுக்கும் தனது நன்றியைத் தெரிவித்தார்.

தனது சினிமா பயணம் குறித்து பேசிய அவர், “கடந்த பல ஆண்டுகளாக என்னுடைய சினிமா பயணத்தில் ஏற்பட்ட ஏற்றத் தாழ்வுகளை ரசிகர்கள் நேரில் பார்த்திருக்கிறார்கள். நான் என்ன செய்தாலும், என்ன செய்யாமல் இருந்தாலும் தொடர்ந்து என்னை ஆதரித்து வருகிறார்கள். அவர்களின் அன்புக்கும் ஆதரவுக்கும் எப்போதும் நன்றியுடன் இருப்பேன்” என்றார்.

லைகா புரொடக்ஷன்ஸ் குறித்து அவர் பேசுகையில், “லைகா புரொடக்ஷன்ஸ் மிகப்பெரிய நிறுவனம். தமிழ் சினிமா மட்டுமல்லாமல் இந்திய சினிமாவிலும் அடுத்த கட்டத்திற்கு செல்லக்கூடிய முயற்சிகளுக்கும், வித்தியாசமான வாய்ப்புகளுக்கும் அவர்கள் தொடர்ந்து ஆதரவு அளித்து வருகிறார்கள். ஒரு புதிய முயற்சியின் மீது நம்பிக்கை வைத்து அதற்காக முதலீடு செய்வது சாதாரண விஷயம் அல்ல. அந்த தைரியத்திற்கும் நம்பிக்கைக்கும் அவர்களுக்கு நன்றி” எனக் குறிப்பிட்டார்.

மேலும், ‘சிக்மா’ படத்தின் இயக்குநர் சஞ்சய் குறித்து பேசிய சந்தீப் கிஷன், “மிக இளம் வயதிலேயே சஞ்சய் இந்தப் படத்தை இயக்கும் பொறுப்பை ஏற்றிருக்கிறார். இயக்குநராக மட்டுமல்லாமல், தயாரிப்பிலும் தனது பங்களிப்பைச் செய்திருக்கிறார். ஏன் இயக்குநராக வேண்டும் என்பதற்கான தெளிவான காரணமும், கதைகளை சொல்ல வேண்டும் என்ற ஆர்வமும் அவரிடம் இருக்கிறது. அந்த ஆர்வம் தான் இந்தப் படத்திலும் தெரிகிறது” என்றார்.

‘சிக்மா’ திரைப்படத்தின் தனித்துவம் குறித்து பேசிய அவர், “இது ஒரு எபிசோடிக் ஆக்‌ஷன் காமெடி திரைப்படம். மிகவும் ஜாலியான அதே நேரத்தில் அதிரடியான பொழுதுபோக்கு படமாக உருவாகியுள்ளது. குறிப்பாக இரண்டாம் பாதியில் வரும் ஆக்‌ஷன் காட்சிகளும், கிளைமாக்ஸ் காட்சியும் ரசிகர்களுக்கு வித்தியாசமான அனுபவத்தைத் தரும். படப்பிடிப்பில் சில காட்சிகள் சவாலாக இருந்தாலும், அவற்றைச் செய்வதை நான் மிகவும் ரசித்தேன்” என்றார்.

படத்தின் மீதான தனது எதிர்பார்ப்பை வெளிப்படுத்திய சந்தீப் கிஷன், “ஒரு படம் ரசிகர்களை திருப்திப்படுத்த வேண்டும். அவர்களை சிரிக்க வைக்க வேண்டும்; அதே நேரத்தில் பல இடங்களில் கைதட்டவும் வைக்க வேண்டும். ‘சிக்மா’ அப்படிப்பட்ட ஒரு படமாக இருக்கும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது” என்று தெரிவித்தார்.

படத்தின் எழுத்தாளர் ஜி.எஸ்.ஆர். குறித்தும் பாராட்டிப் பேசிய அவர், “இந்தப் படத்தின் எழுத்து மிகவும் முக்கியமானது. எங்கள் எழுத்தாளர் ஜி.எஸ்.ஆர். மீது எனக்கு மிகுந்த பெருமை இருக்கிறது” என்றார்.

இறுதியாக ரசிகர்களிடம் வேண்டுகோள் விடுத்த சந்தீப் கிஷன், “இந்தப் படத்தை ரசிகர்கள் முதல் நாளிலேயே பார்த்து, தங்களுடைய அனுபவத்தை மற்றவர்களிடம் பகிர்ந்து கொள்ள வேண்டும். இந்தப் படத்திற்கான உண்மையான பேச்சு ரசிகர்களின் வார்த்தைகளிலிருந்தே வர வேண்டும். ‘சிக்மா’ எங்கள் அனைவருக்கும் மிகவும் சிறப்பான படம். நீங்கள் அனைவரும் இந்தப் படத்தை ரசிப்பீர்கள் என்று நம்புகிறேன்” என்று கூறினார்.

வித்தியாசமான ஆக்‌ஷன் காட்சிகள், நகைச்சுவை மற்றும் பொழுதுபோக்கு அம்சங்களுடன் உருவாகியுள்ள ‘சிக்மா’, ரசிகர்களின் எதிர்பார்ப்பை எந்த அளவுக்கு பூர்த்தி செய்யும் என்பதை திரையரங்க வெளியீட்டுக்குப் பிறகு தெரிந்து கொள்ளலாம்.

 

“Sigma Will Make Audiences Laugh, Cheer and Applaud!” – Sundeep Kishan

Chennai:
Actor Sundeep Kishan has expressed confidence that Sigma, produced by Lyca Productions, will offer audiences a refreshing action-comedy experience packed with entertainment.

Speaking at the event held for Sigma, Sundeep Kishan thanked the film’s entire team and his fans for their constant love and support.

Reflecting on his journey in cinema, Sundeep said, “Over the years, my fans have witnessed all the highs and lows of my journey. They have stood by me through everything I have done and everything I may not have done. I will always be grateful for their love and support.”

Speaking about Lyca Productions, he said, “Lyca Productions is a very big banner. What I have always admired about them is their willingness to support films that attempt to take Tamil cinema and Indian cinema a step forward. It takes a lot of courage and belief to invest in new ideas and opportunities, and I am thankful to them for that trust.”

Sundeep Kishan also had words of appreciation for director Sanjay, who has taken on the responsibility of directing Sigma at a young age.

“Despite being very young, Sanjay has taken up a huge responsibility with this film. He has contributed not only as a director but also to the production. He has a clear reason for wanting to become a filmmaker and a genuine passion for storytelling. That passion is reflected in the film as well,” he said.

Talking about the film’s genre and treatment, Sundeep described Sigma as an episodic action comedy.

“Sigma is an episodic action-comedy film. It is a fun and entertaining movie with plenty of action. The action sequences have been designed differently, especially the major block in the second half and the climax. They will offer audiences something unique. Some portions were challenging to shoot, but I thoroughly enjoyed the experience,” he said.

Sundeep Kishan also spoke about what he expects from the film when it reaches theatres.

“My biggest expectation is that the film should satisfy the audience. It should be a film that makes people laugh and also makes them cheer and applaud at several moments. I strongly believe Sigma will deliver that experience,” he said.

The actor also praised the film’s writer G.S.R., saying, “The writing is one of the important strengths of this film. I am extremely proud of our writer G.S.R.”

Concluding his speech, Sundeep Kishan made a special appeal to audiences to experience the film in theatres and share their reactions with others.

“I want the real conversation about this film to come from the audience. If you watch the film on the first day and share your experience with others, that would mean a lot to all of us. Sigma is a very special film for everyone involved, and I truly believe audiences will enjoy it,” he said.

With its combination of action, comedy and entertainment, Sigma is gearing up to offer audiences a distinctive theatrical experience.