Monday, April 20
Shadow

லிட்டில் டி. ஆர் வச்சு செய்ய காசு கொடுக்கும் அவரின் தயாரிப்பாளர்

வம்பு நடிகரை கலாய்த்து எழுதச் சொல்லி காசு கொடுத்துள்ளது தயாரிப்பு நிறுவனம்.
பிட்டு படம் எடுத்த இயக்குநரின் இயக்கத்தில் ஒரு படத்தில் நடித்துள்ளார் வம்பு நடிகர். பெயரிலேயே மூன்று ‘ஏ’ இருக்கும் அந்தப் படம், வருகிற ரம்ஜானுக்கு ரிலீஸ் ஆவதாக அறிவித்தனர். எனவே, படப்பிடிப்பு சமயத்தில் ஏகப்பட்ட டார்ச்சர் கொடுத்த வம்பு நடிகரை கலாய்த்து எழுதச்சொல்லி, ட்விட்டர் புரமோஷன் செய்யும் ஆட்களைக் கூப்பிட்டு அனுப்பி காசு கொடுத்துள்ளது தயாரிப்பு நிறுவனம்.

இதைத் தெரிந்துகொண்ட வம்பு நடிகர், படத்தின் புரமோஷனுக்கு வரமாட்டேன் என்றாராம். ‘படத்துக்கு ஏகப்பட்ட எதிர்பார்ப்பு இருக்கிறது. ‘நீ வந்தா வா, வராட்டி போ…’ என்கிற ரீதியில் வம்பு நடிகருக்கே சவால் விட்டிருக்கிறதாம் தயாரிப்பு நிறுவனம். இந்நிலையில், இந்தப் படத்தின் சென்சார் நேற்று முடிந்தது இந்த படத்துக்கு தணிக்கை குழு U/A சான்றிதழ் கொடுக்கப்பட்டுள்ளது இதனால் வரி விலக்கு கிடையாது

Leave a Reply