Wednesday, June 24
Shadow

அக்டோபர்யில் ஹாலிவுட் அவதாரம் எடுக்கும் சிம்பு

தான் இயக்கவுள்ள ஹாலிவுட் படத்தின் படப்பிடிப்பை, அக்டோபரில் துவங்க சிம்பு திட்டமிட்டு இருக்கிறார்.

தனது இயக்கத்தில் உருவாகவுள்ள ஹாலிவுட் படத்தின் முதற்கட்ட பணிகளில் தீவிரமாக கவனம் செலுத்தி வருகிறார் சிம்பு. சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவு செய்யவுள்ள இப்படத்துக்கு யுவன் இசையமைக்கவுள்ளார். ஆண்டனி எடிட்டிங் பணிகளை மேற்கொள்ளவுள்ளார்.

மணிரத்னம் இயக்கத்தில் உருவாகவுள்ள படத்திற்காக ஜனவரியில் தேதிகள் ஒதுக்கியுள்ளதால், அக்டோபரில் ஹாலிவுட் படத்தின் படப்பிடிப்பைத் தொடங்க சிம்பு முடிவு செய்துள்ளார். டிசம்பருக்கும் ஒட்டுமொத்த படப்பிடிப்பை முடித்துவிட்டு, ஜனவரியில் மணிரத்னம் படத்தில் கவனம் செலுத்தவுள்ளார்.

ஹாலிவுட்டில் மட்டுமே படமாக்கிவிட்டு, மற்ற மொழிகளில் டப்பிங் செய்து வெளியிட திட்டமிட்டு இருக்கிறார் சிம்பு. இப்படத்தில் பாடல்கள் கிடையாது. மேலும், இடைவேளையின்றி ஒரே கட்டமாக திரையிடவும் முடிவு செய்திருக்கிறார்.

Leave a Reply