Friday, January 17
Shadow

சிம்புவுடன் சேர்ந்து 90 அடிக்கும் ஓவியா

பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு நடிகை ஓவியா ராகவா லாரன்ஸ் இயக்கத்தில் `காஞ்னா-3′ படத்தில் நடித்து வருகிறார். தற்போது `களவாணி-2′ படத்தில் பிசியாகி இருக்கிறார்.

இந்நிலையில், அவரது அடுத்த படம் குறித்த அறிவிப்பும் சமீபத்தில் வெளியாகி இருந்தது. நாயகிக்கு முக்கியத்துவம் உள்ள கதாபாத்திரத்தில் ஓவியா நடிக்கும் இந்த படத்திற்கு சிம்பு இசையமைக்க இருக்கிறார். சந்தானத்தின் `சக்க போடு போடு ராஜா’ படத்தை தொடர்ந்து ஓவியா படத்திற்கு சிம்பு இசையமைக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

`குளிர் 100 டிகிரி’ படத்தை இயக்கிய அனிதா உதீப் இந்த படத்தை இயக்குகிறார். இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் நேற்று வெளியானது. அதன்படி படத்திற்கு `90 எம்.எல்’ என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இந்த படத்திற்கு அரவிந்த் கிருஷ்ணா ஒளிப்பதிவு செய்கிறார். அந்தோணி படத்தொகுப்பு பணிகளை மேற்கொள்கிறார். விஸ் என்டர்டெயின்மெண்ட் இந்த படத்தை தயாரிக்கிறது. #Oviya #90ML #STR