Wednesday, June 24
Shadow

சிம்பு த்ரிஷா மற்றும் வடிவேலு நடிக்க முடியுமா தயாரிப்பாளர் சங்கம் வைக்க போகும் ஆப்பு

தமிழ் சினிமா இன்று இருக்கும் நிலைமை என்றால் மிக மோசம் பல தயாரிப்பாளர்கள் இன்று தயாரிப்பு நிறுத்திவிட்டனர் காரணம் தொடர்ந்து நஷ்டம் அதோடு சம்பள உயர்வு சங்க பிரச்சனைகள் இப்படி எல்லாமே பிரச்சனை இவை அனைத்தையும் கடந்து படத்தை எடுத்து முடித்தல் ரிலீஸ் அதோடு பிரச்சனை இதில்  சென்சார் பக்கம் அதோடு விநியோகிஸ்தர்கள் ஒரு பக்கம் இந்த சூழ்நிலைகளை கடந்து படம் ரிலீஸ் செய்தால் திருட்டு வீடியோ அத்தனை கஷ்டங்கோடு படங்கள் எடுக்கும் தயாரிப்பர்களுக்கு நடிகர்கள் ஒரு பக்கம் கொடுக்கும் டார்ச்சர்

அண்ணாதுரை’ இசை வெளியீட்டு விழாவில் முன்னணி நடிகர் மற்றும் காமெடி ஜாம்பவான் ஆகியோர் மீது தயாரிப்பாளர் சங்கத்துக்கு புகார் வந்திருப்பதாகவும், விரைவில் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தயாரிப்பாளர் சங்க செயலாளர் ஞானவேல்ராஜா பேசியிருந்தார்.

இதனை தொடர்ந்து அந்த நபர்கள் சிம்பு, திரிஷா மற்றும் வடிவேலு என்று தற்போது தகவல் வெளியாகியுள்ளது. “அன்பானவன் அடங்காதவன் அசராதவன்” படத்தின் நஷ்டத்தைத் தொடர்ந்து, சிம்பு மீது பல்வேறு குற்றச்சாட்டுகளைத் தெரிவித்து தயாரிப்பாளர் மைக்கேல் ராயப்பன் புகார் தெரிவித்திருக்கிறார். இதற்காக சிம்புவிடம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. அதைபோல் படப்பிடிப்பின் போது ஏற்பட்ட மனக்கசப்பினால் வடிவேலு ‘இம்சை அரசன்-2’ படப்பிடிப்பிற்கு வராமல் உள்ளார். இவர் மீது ஷங்கர் புகார் அளித்ததை அடுத்து வடிவேலுவிற்கும் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பட்டுள்ளதாம்.

மேலும், ‘சாமி 2’ படத்திலிருந்து த்ரிஷா விலகலைத் தொடர்ந்து, அப்படத்தின் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டு இருக்கிறது. அவருடைய விலகலைத் தொடர்ந்து, படத்தின் கதையைவே மாற்றக் கூடிய சூழலுக்கு படக்குழு தள்ளப்பட்டு இருக்கிறது. இதன் மீது தயாரிப்பாளர் அளித்த புகாரின் பேரில் விளக்கம் கேட்கப்பட்டுள்ளது.

Leave a Reply