சிரேயா கோசல் அல்லது சிரேயா கோஷல் ஒரு இந்தியப் பாடகி. பல மொழித் திரைப்படங்களில் பின்னணிப் பாடல்கள் பாடியுள்ளார். நான்கு முறை தேசிய திரைப்பட விருதுகளையும், ஃபிலிம்பேர் விருதுகளையும் வென்றுள்ளார். இவர் தேவ்தாஸ் இந்தி படம் மூலம் 2002ஆம் ஆண்டு திரைப்பட உலகுக்கு அறிமுகமானார்.
 
இவர் பாடிய தமிழ் பாடல்கள் 
 
முன்பே வா (சில்லுனு ஒரு காதல்), நினைத்து நினைத்து பார்த்தால் (7ஜி ரெயின்போ காலனி), சாரல் (குசேலன்), எந்தக் குதிரையில் (சத்தம் போடதே), கண்ணின் பார்வை (நான் கடவுள்), ஐயைய்யோ! என் உசுருக்குள்ள… (பருத்தி வீரன்), உருகுதே மருகுதே (வெயில்), எனக்கு பிடித்த பாடல் (ஜூலி கணபதி), ஒன்ன விட(விருமாண்டி), பத்துக்குள்ளே நம்பர் ஒன்னு சொல்லு (வசூல் ராஜா எம்.பி.பி.எஸ்.), குண்டுமல்லி குண்டுமல்லி தென்றல் காத்து அடிக்குது… (), என் நெஞ்சின் இராகம் எங்கே? எங்கே? (உதயம் 2006), ஆதிவாசி நானே (கேடி), ஆறடி இராட்சசனோ! (ஐந்தாம்படை), ஆவாரம் பூவுக்கும் ஐயனார் தோளுக்கும் (அறை எண் 305இல் கடவுள்), அண்டங்காக்கா கொண்டக்காரி (சைந்தவியுடன் இணைந்து) (அந்நியன்), மன்னிப்பாயா” (விண்ணைத்தாண்டி வருவாயா), இறக்கை முளைத்ததேன் (சுந்தர பாண்டியன்), மின்வெட்டு நாளில் இங்கே (எதிர்நீச்சல்)

Related