
சுனிதி சௌகான் இந்தி, மராத்தி, தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், குஜராத்தி, அஸ்ஸாமி மற்றும் பெங்காலி ஆகிய மொழிகளில் 2,000 க்கும் மேற்பட்ட பாடல்கள் பாடியிருக்கிறார். இவர் பதினான்கு முறை பிலிம்பேர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டு அவற்றில் மூன்று முறை வென்றுள்ளார். மேலும் இரண்டு ஸ்டார் ஸ்க்ரீன் விருதுகளையும், இரண்டு ஐபா விருதுகளையும் மற்றும் ஒரு ஜீ சினி விருதையும் பெற்றுள்ளார்.சுனிதி சௌஹான் தம் திரைத்துறை பிரவேசத்தை சாஸ்த்ராவில் துவங்கினார்.

சுனிதி சௌஹான் அல்கா யாக்னிக் ,உதித் நாராயணன் மற்றும் சுக்விந்தர் சிங்க் (ஓம்காரா மற்றும் ஆஜா நச்சலே ஆகிய படங்களில்) ஆகியோருடன் இணைந்து பாடியுள்ளார்.அவர் பெரும்பாலும் சோனு நிகத்துடனே இணைந்து பாடியுள்ளார்.அவர் ஷ்ரேயா கோஷல்-க்கு போட்டியாளராக கருதப்படுகிறார்.பாகிஸ்தானி பாடகர் பாக்ஹிர் மெஹ்மூத்துடன் அவரின் ஆல்பம் மந்த்ராவிற்காக மெல்லிசை பாடல் ஒன்று பாடியுள்ளார்.மேலும் அவர் ஏந்ரிஃஉஎ இக்லேசியஸ்-உடன் இணைந்து “ஹார்ட்பீட் (இந்திய மிக்ஸ்)” எனும் பாடலையும் பாடியுள்ளார்.
அவர் ஜெய்தீப் சாஹ்னி, இர்ஷாத் கமில், குல்சார் , சமீர், பிரசூன் ஜோஷி, ச்வனாந்து கிர்கிரே, தி லேட் ஆனந்த் பாக்ஷி மற்றும் ஜாவேத் அக்தர் ஆகிய பாடலசிரியர்களுடனும்,வண்டேமடாராம் ஸ்ரீநிவாஸ், பப்பி லஹிரி, A. R. ரஹ்மான், இளையராஜா, யுவன், ஹிமேஷ் ரேஷம்மியா, அனு மாலிக், ஜடின் லலித், ஷங்கர்-இஷான்-லாய், ப்ரிடம்,சக்ரபோர்ட்டி, ராஜேஷ் ரோஷன், நதீம்-ஷ்ரவன், ஆனந்த்-மிலிந்த், விஷால்-ஷேக்கார், M. M. கீரவாணி ஆகிய இசையமைப்பாளர்களுடனும் பணியாற்றியுள்ளார்.

சுனிதி சௌஹான் ஹிந்தி திரைத்துறையிலுள்ள முன்னணி நடிகைகளுக்கு பின்னணி குரல் கொடுக்கும் பாடகிகளுள் முக்கியமானவராவார்.அவர் மாதுரி தீட்சித், ஐஸ்வர்யா ராய்,பிரீத்தி சிந்தா, ராணி முகர்ஜி, கரீனா கபூர், பிபாசா பாசு, பிரியங்கா சோப்ரா, தீபிகா படுகோனே, கொன்கொனா சென் ஷர்மா ஆகியோருக்கும் மற்றும் பலருக்கும் பின்னணி குரல் கொடுத்துள்ளார்.மேலும் அவர் முன்னாள் நடிகைகளான ரேகா ஆகியோரின் குரல்களுக்காகவும் பாடியுள்ளார்.அவரின் பின்னணி குரல் இருபெரும் முன்னணி நடிகைகளான கஜோல்க்காக பானா படத்திலும்,மாதுரி தீட்சித்க்காக ஆஜா நச்சலே படத்திலும் சிறப்பானதாக கருதப்படுகிறது.

2011 ம் ஆண்டு சுனிதி சௌஹான் உலக அளவிலான பாப் பாடல்கள் பாடும் முதல் இந்திய பெண்மணி எனும் சிறப்பை பெற்றார். 2002 -ம் ஆண்டில் ஷௌஹான் பாபி கான் என்பவரை மணந்து கொண்டார்.ஆனால் அந்த ஜோடி பிரிவுற்றது.ஏப்ரல் 27, 2012 ல் சுனிதி ஷௌஹான் தம் பால்ய நண்பரும்,இசையமைப்பாளருமான ஹிதேஷ் சோநிக்கை மணந்தார்.இத்திருமணத்திற்கு சக பாடகர்களான ஆஷா போஸ்லே, கவிதா கிருஷ்ணமுர்த்தி,ஸ்மிதா தாகேரே, அல்கா யாக்னிக், கொன்கொனா சென் ஷர்மா ஆகியோர் வந்திருந்தனர்.
