
சிவகார்த்திகேயன், நயன்தாரா நடிப்பில், மோகன் ராஜா இயக்கத்தில் கடந்த வெள்ளியன்று ரிலீசான ‘வேலைக்காரன்’ படம் , திரையிடப்பட்ட எல்லா இடங்களிலும் அமோக வரவேற்பை பெற்று வருகிறது.
ரிலீசான முதல் நான்கு நாட்களில், சிவகார்த்திகேயனின் முந்தைய படங்களின் வசூலை முறியடித்த இந்தப்படம், தற்போது சூர்யா நடித்த ‘சிங்கம் 3’ படத்தின் வசூல் சாதனையை முறியடித்துள்ளது.
தமிழில் விரல்விட்டு எண்ணக்கூடிய படங்களில் மட்டுமே நடித்துள்ள சிவகார்த்திகேயன் தமிழ் சினிமாவில் ஓப்பனிங் வசூலில் அஜீத், விஜய், சூர்யாவுக்கு அடுத்த இடத்தில் இருந்த சிவா ‘வேலைக்காரன்’ படத்தின் மூலம் பாக்ஸ் ஆபிஸ் ஓப்பனிங் வசூலில் மூன்றாவது இடத்தை பிடித்திருக்கிறார்.
தமிழ் சினிமாவில் விஜய், அஜீத்திற்கு பிறகு ரசிகர்கள் அதிகம் இருப்பது நடிகர் சூர்யாவுக்கு தான்.
கடந்த ஆண்டு பாக்ஸ் ஆபிஸில் தமிழகத்தில் அதிகம் வசூல் செய்த படங்களில் ‘பாகுபலி 2’, ‘மெர்சல்’, ‘விவேகம்’, ‘சிங்கம் 3’ உள்ளிட்ட படங்கள் அடுத்தடுத்த இடங்களை பிடித்திருக்கிறது. இந்நிலையில், ‘சிங்கம் 3’ படத்தின் தமிழக வசூலை ‘வேலைக்காரன்’ படம் பின்னுக்கு தள்ளியுள்ளது. ‘வேலைக்காரன்’ தமிழகம் முழுவதும் இதுவரை சுமார் ரூ.56 கோடி வசூல் செய்திருப்பதாக கூறப்படுகிறது.