Friday, January 17
Shadow

கடும் எதிர்ப்புகளுக்கு நடுவே தணிக்கை சான்றிதழை பெற்ற பத்மாவதி

ராஜஸ்தானின் சித்தூர் ராணி பத்மினியின் கதையை மையமாக வைத்து ‘பத்மாவதி’ படத்தை பாலிவுட்டின் முன்னணி இயக்குநர் சஞ்சய் லீலா பன்சாலி இயக்கியிருக்கிறார்.

இதில் ராணி பத்மாவதியாக நடிகை தீபிகா படுகோனே நடித்துள்ளார். இந்த படத்துக்கு ராஜபுத்திர வம்சத்தினர் எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். படத்துக்கு தணிக்கை சான்றிதழ் வழங்கக் கூடாது என்று ராஜஸ்தான் முதல்வர் உள்ளிட்ட வட மாநிலத்தில் பலரும் எதிர்ப்பு தெரிவித்தனர. இதையடுத்து கடந்த டிசம்பரில் வெளியாக இருந்த பத்மாவதி படத்துக்கு தணிக்கை குழு சான்றிதழ் மறுக்கப்பட்டது.

130 கோடியில் உருவான இந்த படத்தின் ஆட்சேபகரமான காட்சிகளை நீக்கிய பின்பு படம் தணிக்கைக்கு அனுப்பி வைக்கப்பட்ட நிலையில், தணிக்கை குழுவில் இந்த படத்துக்கு யு/ஏ சான்றிதழ் கிடைத்துள்ளது. மேலும் படத்தில் இருந்து ராணி பத்மாவதியும், அலாவுதீன் கில்ஜியும் பாடும் கனவு பாடல் காட்சிகளில் மாற்றம் செய்யப்பட்டது. படத்தின் பெயர் ‘பத்மாவத்’ எனவும் மாற்றப்பட்டது. மொத்தத்தில் 26 காட்சிகளில் வெட்டு போடப்பட்டுள்ளது.

இவ்வாறாக படத்தின் பிரச்சனைகள் முடிவுக்கு வந்துள்ள நிலையில், படத்தை 60 நாடுகளில் வெளியிட முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்தியாவிலும் கூடுதல் நகரங்களில் ரிலீஸ் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. படம் குடியரசு தினத்தை முன்னிட்டு வருகிற ஜனவரி 25-ஆம் தேதி வெளியாக இருப்பதாக கூறப்படுகிறது.

Leave a Reply