‘சீமராஜா’ படத்துக்குப் பிறகு, ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் மாறி மாறி நடித்து வருகிறார் சிவகார்த்திகேயன். ஒரு படத்தை, எம்.ராஜேஷ் இயக்குகிறார். ஸ்டுடியோ க்ரீன் ஞானவேல் ராஜா தயாரிக்கும் இந்தப் படத்தில், இரண்டாவது முறையாக சிவகார்த்திகேயனுடன் ஜோடி சேர்கிறார் நயன்தாரா. காமெடி என்டெர்டெயினராக இது உருவாகிறது.
பிரமாண்டகளால் தோல்வியை சந்தித்த சிவகர்த்திகேயன் மீண்டும் தன் பாணியை நோக்கி வருகிறார் தேவை இல்லாத விஷயங்களை தவிர்த்து ஸ்கிரிப்ட்க்கு என்ன தேவையோ அதை மட்டும் செய்து நிரந்த இடத்தை பிடிக்க முடிவு செய்துவிட்டார் அதன் தேர்வே இயக்குனர் மித்திரன்
இன்னொரு படத்தை, ‘இன்று நேற்று நாளை’ படத்தை இயக்கிய ரவிக்குமார் இயக்குகிறார். சயின்ஸ் பிக்ஷன் படமாக உருவாகும் இதில், ரகுல் ப்ரீத்சிங் ஹீரோயினாக நடிக்கிறார். ‘சீமராஜா’ படத்தைத் தொடர்ந்து இந்தப் படத்தையும் ஆர்.டி.ராஜாவின் 24 ஏஎம் ஸ்டுடியோஸ் தயாரிக்கிறது. இந்தப் படத்துக்கு, ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார்.
இந்நிலையில், எம்.ராஜேஷ் இயக்கும் படத்துக்கு ‘ஜித்து ஜில்லாடி’ எனத் தலைப்பு வைக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகின. ‘ஜித்து ஜில்லாடி’ என்பது விஜய் நடிப்பில் வெளியான ‘தெறி’ படத்தில் இடம்பெற்ற ஒரு பாடலின் முதல் வரியாகும்.
ஆனால், இந்தச் செய்தியை இயக்குநர் ராஜேஷ் ட்விட்டரில் மறுத்துள்ளார். சிவகார்த்திகேயன் படத்துக்கான தலைப்பு இன்னும் முடிவாகவில்லை என்றும், அதிகாரபூர்வ அறிவிப்பின் மூலம் அனைவருக்கும் தெரிவிக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இந்த இரண்டு படங்களையும் முடித்த பிறகு, ‘இரும்புத்திரை’ மித்ரன் இயக்கும் படத்தில் நடிக்க இருக்கிறார் சிவகார்த்திகேயன்.