Sunday, November 3
Shadow

இயக்குனர் பாலாவுடன் கைகோர்க்கும் உதயநிதி ஸ்டாலின்

2008 ஆம் ஆண்டு விஜய் நடித்த குருவி படத்தின் தயாரிப்பாளராக திரைத்துறைக்குள் வந்தார் உதயநிதி.

2012 இல் ராஜேஷ் இயக்கிய ஒருகல் ஒருகண்ணாடி படத்தின் மூலம் ந்டிகராகவும் அறிமுகமானார்.

அதன்பின் வரிசையாகப் படங்களில் நடித்துகொண்டிருக்கிறார்.

அண்மைக்காலமாக புகழ்பெற்ற இயக்குநர்களின் படங்களில் நடிப்பது என்று முடிவெடுத்திருக்கிறார் போலும்.

பிரியதர்ஷன் இயக்கத்தில் நிமிர் படத்தில் நடித்தார். அதைத் தொடர்ந்து சீனுராமசாமி இயக்கத்தில் கண்ணே கலைமானே படத்தில் நடித்தார்.

அதன்பின் தற்போது மிஷ்கின் இயக்கத்தில் சைக்கோ என்கிற படத்தில் நடித்துக்கொண்டிருக்கிறார். அப்படத்தின் படப்பிடிப்பு இப்போது சென்னையில் நடந்துகொண்டிருக்கிறது.

இந்நிலையில் இப்படத்தைத் தொடர்ந்து இயக்குநர் பாலா இயக்கத்தில் அவர் நடிக்கவிருக்கிறார் என்று சொல்லப்படுகிறது.

இயக்குநர் பாலா இப்போது, விக்ரம் மகனை நாயகனாக வைத்து வர்மா படத்தை இயக்கிக்கொண்டிருக்கிறார். அப்படம் வெளியானதும் உதயநிதி நடிக்கும் படத்தை இயக்கப்போகிறார் என்று சொல்கிறார்கள்.