Sunday, April 19
Shadow

வேலைக்காரன் படத்துக்காக அதிக செலவில் செட் மட்டும் இத்தனை கோடியாம் உண்மையாவா

ரெமோ படத்தை தொடர்ந்து நடிகர் சிவகார்த்திகேயன், ‘தனி ஒருவன்’ ராஜா இயக்கும் வேலைக்காரன் படத்தில் நடித்து வருகிறார். சிவகார்த்திகேயன் ஜோடியாக நயன்தாரா நடிக்கும் இப்படத்தில் பிரபல மலையாள ஸ்டார் ஃபஹத் ஃபாசிலும் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளார்.

மேலும் சினேகா, ஆர்.ஜே. பாலாஜி, சதீஷ், தம்பி இராமையா, பிரகாஷ் ராஜ் ஆகியோரும் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள். அனிருத் இப்படத்துக்கு இசையமைக்கிறார். இப்படத்தில் சிவகார்த்திகேயன் சேரியை சேர்ந்த இளைஞராக நடித்து வருகிறார்.

தமிழ் சினிமாவின் வசூல் நாயகன் என்று சொல்ல படும் சிவகார்த்திகேயன் தற்போது நடித்து வரும் படம் வேலைக்காரன் இந்த படத்தின் படபிடிப்பு கிட்டத்தட்ட இரண்டு மாதங்களாக சென்னியில் உள்ள சாலிகிராமம் பிரசாத் ஸ்டுடியோவில் தான் மிக பிரமாண்ட செட் போட்டு நடந்து கொண்டு இருக்கிறது. இந்த செட் மிகுந்த பொருள் செலவில் போட்டு இருக்கிறார் தயாரிப்பாளர் ஆர் டி ராஜா இது ஒரு நடுதரவர்கதினர் தாங்கும் காலனியாக செட் அமைத்துள்ளனர் இந்த செட் செலவு மட்டும் 5 கோடி செலவில் போட்ட இருகிறார் தயாரிப்பாளர் ராஜா பாராட்டனும். அப்ப படம் நிச்சயம் மிகவும் பிரமாண்டமாக வரும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை

Leave a Reply