Tuesday, October 27
Shadow

சிவகார்த்திகேயனின் வேலைக்காரன் படத்துக்கு மிக பெரிய எதிர்பார்பு இதை பூர்த்தி செய்வாரா

ரெமோ படம் மாபெரும் வெற்றிக்கு பின் சிவகார்த்திகேயன் நடிக்கும் படம் வேலைக்காரன் இந்த படத்தை தனி ஒருவன் வெற்றிக்கு பிறகு இயக்குனர் ராஜா இயக்குவதால் இந்த படத்துக்கு மாபெரும் வரவேற்ப்பு உள்ளது இது ரசிகர்களிடம் மட்டும் இல்லை சினிமாவில் வியாபாரரீதியாகவும் மிக பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

சிவகார்த்திகேயன் ஜோடியாக நயன்தாரா நடிக்கும் இப்படத்தில் பிரபல மலையாள ஸ்டார் ஃபஹத் ஃபாசிலும் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளார்.

மேலும் சினேகா, ஆர்.ஜே. பாலாஜி, சதீஷ், தம்பி இராமையா, பிரகாஷ் ராஜ் ஆகியோரும் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள். அனிருத் இப்படத்துக்கு இசையமைக்கிறார். சிவகார்த்திகேயன் கேரியரில் இதுதான் அதிக பட்ஜெட்டில்
உருவாகும் படம்.

ரெமோ படம் 90 கோடி வரை வியாபாரம் ஆனதால் இந்த படத்தை அதற்கேற்றாற்போல் பெரிய தொகைக்கு வியாபாரம் செய்வார்கள். இப்படத்தின் பிஸ்னஸ் வரும் ஏப்ரல் 14-ம் தேதி முதல் தொடங்கவுள்ளதாம். எப்படி சிவகார்த்திகேயன் கேரியரில் அதிக தொகைக்கு விற்பனையாகும் படம் இதுவாகத்தான் இருக்கும்.

Leave a Reply