இவர் ஆக்கர் பிக்சர் புரொடக்ஷன்ஸ் நிறுவனத்தின் நிறுவனர் மற்றும் உரிமையாளர் ஆவார். ஒரு வரைகலை வடிவமைப்பாளராக தனது வாழ்க்கையை தொடங்கிய செளந்தர்யா, அவரது தந்தை ரஜினிகாந்த் நடித்த படங்களில் தலைப்புக் காட்சிகளை வடிவமைக்கத் தொடங்கினார். அவர் கோவா திரைப்படத்தின் மூலம் ஒரு குறிப்பிடத்தக்க திரைப்பட தயாரிப்பாளராகவும் ஆனார். ரசினிகாந்த் நடித்த கோச்சடையான் திரைப்படத்தில் ஒரு இயக்குனராக அறிமுகமானார்.
இவர் வரைகலை வடிவமைப்பு செய்த திரைப்படங்கள்
படையப்பா, பாபா, அன்பே ஆருயிரே, மஜா, சண்டக்கோழி, சந்திரமுகி, சிவகாசி, சென்னை 600028, சிவாஜி, கோச்சடையான்
இவர் தயாரித்த திரைபடம்
கோவா
இவர் இயக்கிய திரைப்படம்
கோச்சடையான்
