Wednesday, October 28
Shadow

ஸ்ரீதேவி (மயில்) மரணம் மேட்டர்ல சிக்கல் மேல சிக்கலாக்குறாங்க..!

7 மணிக்கு போனி கபூர் ஹோட்டலுக்கு போயிருக்காரு..!

7.15 மணிக்கு ஸ்ரீதேவி பாத்ரூமுக்குள்ள போயிருக்காங்க..!

7.30 மணிக்கு போனி கபூர் பாத்ரூம் கதவைத் தட்டியிருக்காரு.. பதில் இல்லை..!

ஆனால் 10.30 மணிக்குத்தான் போலீஸுக்கு தகவல் சொல்லியிருக்காரு..

கபூர் 3 மணி நேரமா என்னய்யா பண்ணிக்கிட்டிருந்தாரு..? குழப்புதே..?

துபாய், எமிரேட்ஸ் டவர்ஸ் ஹோட்டலில் 2201 எண் அறையில் ஸ்ரீதேவி தங்கியிருந்திருக்கிறார்.

அவருடைய பாத்ரூமிருக்கும் பாத்டாப் ஒன்றரை அடி தூரமே உயரம் கொண்டது. “அதில் எப்படி ஸ்ரீதேவி தானாக மூழ்கியிருக்க முடியும்..?” என்று கேள்வியெழுப்புகிறாராம் துபாய் அரசு வழக்கறிஞர்.

அதோடு “மும்பைக்கு போய்விட்டு உடனேயே திரும்பி வர வேண்டிய அவசியம் என்ன.? இருவரும் கடைசியாக என்ன பேசினீர்கள்…?” என்றெல்லாம் போனி கபூரிடம் கேள்விகள் கேட்டு குடைந்தெடுக்கிறார்களாம்..!

துபாய் போலீஸ் “இது வன்முறையான மூழ்கடிப்பாக இருக்கும்…” என்று சந்தேகிக்கிறார்களாம்..!

எப்படியும் இன்றைக்கு ‘எம்பால்மிங்’ கிடையாது என்பது தெரிந்துவிட்டது..!

டிவிஸ்ட் மேல டிவிஸ்ட்டா வருது..!

தீயாய் வேலை பார்க்குறானுங்க துபாயில் இருக்கும் இந்தியத் தூதரக அதிகாரிகள்..!

சாதாரண ஒரு இந்தியன் செத்து அவரது உடலை இந்தியாவுக்கு அனுப்பி வைக்கும் பார்மாலிட்டியில் உதவி கேட்கப் போனால் நாயாய் அலைய வைப்பவர்கள்..

இப்போது கர்மசிரத்தையாக போனி கபூருக்கு வக்கீல் போலவே ஆகிவிட்டார்களாம்..!

“ஸ்ரீதேவியின் குடும்பத்தினருடன் எப்போதும் தொடர்பில் இருக்கிறோம். எவ்வளவு விரைவில் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் ஸ்ரீதேவியின் உடலை வாங்கி அனுப்பி வைப்போம்…” என்று அங்கேயிருக்கும் இந்திய தூதரே என்டிடிவிக்கு பேட்டி கொடுக்கிறார்..! என்னத்த சொல்றது..?

துபாய் இந்தியத் தூதரக அதிகாரிகள் இதே வேகத்தை அனைத்து இந்தியர்கள் மீதும் செலுத்தினால் நன்றாக இருக்குமே..?