Thursday, March 12
Shadow

சன் குழும தலைவர் கலாநிதி மாறன் பிறந்த தினம்

இவர் பூமாலை, குங்குமம் இதழ்களில் எழுதி ஊடக உலகில் முதலாக நுழைந்தார். இவர் இந்தியாவின் பெரும் பணக்காரர்களின் பட்டியலில் 20ஆம் நிலையில் உள்ளார். ஃபோர்ப்ஸ் இதழ் குறிப்பிட்ட படி இவர் உலகிலேயே 349ஆம் பெரும் பணக்காரர் ஆவார்.

இவரின் தந்தையார் முரசொலி மாறன் தமிழகத்தில் அரசியல்வாதியாக பணியாற்றினார். தம்பி தயாநிதியும் முன்னாள் மத்திய ஜவுளிதுறை அமைச்சராவார்.

1991 ஆம் ஆண்டில், கலாநிதி மாறன் கர்நாடகத்தைச் சேர்ந்த காவேரி என்பவரைத் திருமணம் செய்து கொண்டார். திருமதி காவேரி மாறன் அவர்கள் சன் டிவி நெட்வொர்க் தலைமை நிர்வாக அதிகாரியாகப் பதவி பெற்றுள்ளார். இவர்களுக்குக் காவ்யா என்கிற ஒரு பெண் குழந்தை 1992 ம் ஆண்டுப் பிறந்தது.

சன் பிக்சர்ஸ் அல்லது சன் படங்கள் கலாநிதி மாறனின் சன் குழுமத்தில் இடம் பெற்றுள்ள ஒரு நிறுவனம். இது தமிழ்த் திரைப்படங்களைத் தயாரித்தும் வெளியிட்டும் வருகிறது.

இவர் வெளியீட்டளாராக மற்றும் தயாரித்த திரைப்படங்கள்

காதலில் விழுந்தேன், தெனாவட்டு, திண்டுக்கல் சாரதி, படிக்காதவன்,அவுட்லாண்டர், தீ, அயன், மாசிலாமணி, நினைத்தாலே இனிக்கும், கண்டேன் காதலை, வேட்டைகாரன், தீராத விளையாட்டுப் பிள்ளை, சுறா, சிங்கம், தில்லாலங்கடி, எந்திரன், மாப்பிள்ளை, எங்கேயும் காதல், மங்காத்தா

இவர் தயாரிப்பில் உள்ள திரைப்படங்கள்

சர்க்கார்,, காஞ்சனா 3, ரஜினிகாந்த் மற்றும் கார்த்திக் சுப்புராஜ்