
விஜய் ஆன்டனி தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக அறிமுகம் ஆகி பின்னர் ஹீரோ பட்டியலில் இடம் பிடித்தார்.மல மலவென வெற்றிகளை குவித்தார். பின்னர் மீண்டும் ஒரு சின்ன பிரேக் தற்போது வெற்றி வேண்டும் என்ற எண்ணத்தில் கடுமையாக உழைத்து கொண்டு இருக்கும் படம் என்றால் அது ‘திமிரு புடிச்சவன்’
எஸ்.எஸ்.ராஜமெளலியிடம் உதவியாளராகப் பணியாற்றியவர் கணேஷா. ஸ்ரீகாந்த், சுனைனா நடித்த ‘நம்பியார்’ படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார். தற்போது விஜய் ஆண்டனியை வைத்து ‘திமிரு புடிச்சவன்’ என்ற படத்தை இயக்கியுள்ளார்.
இந்தப் படத்தில், போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார் விஜய் ஆண்டனி. அவர் போலீஸாக நடிக்கும் முதல் படம் இது. இதில் நிவேதா பெத்துராஜும் போலீஸாக நடித்துள்ளார். விஜய் ஆண்டனி ஃபிலிம் கார்ப்பரேஷன் இந்தப் படத்தைத் தயாரிக்கிறது.
இந்தப் படத்தில் இடம்பெறும் ஆக்ஷன் காட்சிகளுக்காக, சிலம்பம் கற்றுக்கொண்டு நடித்திருக்கிறார் விஜய் ஆண்டனி. மோட்டார் சைக்கிள் ஓட்டும் காட்சிகள் இருப்பதால், நிவேதா பெத்துராஜுக்கும் பயிற்சி கொடுத்த பின் படமாக்கியுள்ளனர்.
மார்ச் மாதம் தொடங்கிய இதன் படப்பிடிப்பு முடிவடைந்து, போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், இந்தப் படத்தின் தொலைக்காட்சி ஒளிபரப்பு உரிமையை சன் டிவி வாங்கியுள்ளது.
