
திமிரு பிடிச்சவன் – திரைவிமர்சனம்(கவரகூடியவன்) Rank 3.5/5
திமிரு பிடிச்சவன் படத்தின் கதை: ரவுடிகளால் பாதிக்கப்பட்டுள்ள நகரில் நல்ல மாற்றத்தை ஏற்படுத்த முயற்சிக்கும் போலீசாரின் நடவடிக்கைகளே படத்தின் கதையாகும்.
திமிரு பிடிச்சவன் படத்தின் விமர்சனம்
நான், சலீம் போன்ற படங்களில் நடித்த நடிகர் விஜய் ஆண்டனி தனது அடுத்த படத்திலும் அதை உறுதி செய்துள்ளார். விருதுநகரில் இருந்து வரும் முருகவேல் சப்-இன்ஸ்பெக்டர் கேரக்டரில் விஜய் ஆண்டனி நடித்துள்ளார். இரண்டு ஆண்டுகளுக்கு பின்னர் சென்னையில் போஸ்டிங் கிடைத்த முருகவேலுக்கு, தனது சகோதரர் பத்மாவிடம்(சாய் தீனா) விடம் வேலை செய்து சின்ன சின்ன குற்றங்கள் செய்து வருவது தெரிய வருகிறது.
ஒரு கட்டத்தில் தவிர்க்க முடியாத காரணத்தால் தனது சகோதரை கொலை செய்து விடுகிறார். மேலும் இந்த நகரில் பத்மாவால் மக்கள் அவதி பட்டு வருவதை தடுக்கும் முயற்சியில் பெண் சப் இன்ஸ்பெக்டர் மடோனா (நிவேதா பொத்ராஜ்) உடன் இணைந்து இறங்குகிறார். இ...