
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ரசிகர்களுக்கு மகிழ்ச்சி மேல் மகிழ்ச்சி என்று தான் சொல்லணும் இன்று காலா டீசர்
நேற்று தலைவர் மற்றும் கார்த்திக் சுப்புராஜ் படத்தின் இசையமைப்பாளர் யார் என்ற அறிவிப்பு இணையதளங்களை தெறிக்க விடுகிறது .
சூப்பர்ஸ்டார் ரஜினி அடுத்தடுத்து இளம் இயக்குனர்களுடன் கூட்டணி அமைத்து வருகிறார். இயக்குனர் ரஞ்சித்துடன் இரண்டு படங்களைத் தொடர்ந்து கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிக்க இருக்கிறார்.
இந்தப் படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இந்தப் படம் பிரமாண்டமாகத் தயாரிக்கப்பட்டு அடுத்த ஆண்டு வெளியாகும் எனக் கூறப்டுகிறது.
இந்த நிலையில் இப்படத்தின் இசையமைப்பாளராக அனிருத் கமிட்டாகி இருப்பதாக தயாரிப்பு குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். அனிருத் முதன்முறையாக ரஜினி படத்துக்கு இசையமைக்க இருக்கிறார்.
ரஜினிகாந்த் நடிப்பில் பா.ரஞ்சித் இயக்கியிருக்கும் ‘காலா’ திரைப்படம் வரும் ஏப்ரல் 27-ம் தேதி திரைக்கு வர இருக்கிறது. ஷங்கர் இயக்கத்தில் ரஜினி நடித்துள்ள ‘2.ஓ’ படத்தின் சில வேலைகள் இருப்பதால் ரிலீஸ் தள்ளிப்போயிருக்கிறது.
இப்படத்தின் இசையமைப்பாளராக அனிருத் கமிட்டாகி இருப்பதாக தயாரிப்பு குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். இந்தப் படத்தின் மூலமாக சூப்பர்ஸ்டாருடன் முதன்முறையாக இணைந்திருக்கிறார் அனிருத். இதனால், அனிருத் ரசிகர்கள் செம ஹேப்பி.
காலா டீசர் ஒரே நேரத்தில் நான்கு மொழிகளில் வெளியாகி இந்திய அளவில் இணையதளங்களை மிக பெரிய அளவில் ட்ரண்டிங் உண்டுபண்ணியுள்ளது இதனால் சூப்பர் ஸ்டார் ரசிகர்கள் மேலும் மகிழ்ச்சியில் உள்ளனர் .
