Wednesday, May 29
Shadow

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்யின் காலா முதல் பார்வை வெளியீடு

2.0′ படத்தைத் தொடர்ந்து மீண்டும் ரஞ்சித் இயக்கத்தில் ரஜினி நடிக்கவுள்ள படத்துக்கு ‘காலா’ என பெயரிட்டுள்ளார்கள். மே 28-ம் தேதி முதல் படப்பிடிப்பு தொடங்க படக்குழு திட்டமிட்டுள்ளது.

ஹியூமா குரேஷி, சமுத்திரக்கனி உள்ளிட்டோர் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ள இப்படத்துக்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்கவுள்ளார். படத்தின் எடிட்டராக ஸ்ரீகர் பிரசாத், ஒளிப்பதிவாளராக முரளி, சண்டைப் பயிற்சியாளராக திலீப் சுப்பராயன் ஆகியோர் பணிபுரியவுள்ளார்கள்.

‘காலா’ படத்தின் தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய லோகோ மட்டும் அடங்கிய போஸ்டர்களை இன்று காலை தயாரிப்பாளர் தனுஷ் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இதனால் மூன்று மொழிகளிலும் இப்படம் வெளியாகவுள்ளது உறுதியாகி இருக்கிறது.

மேலும், படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர்களை மாலை 6 மணிக்கு வெளியிடுவதாக தனுஷ் அறிவித்திருந்தார். இந்நிலையில் ‘காலா’ படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை தனுஷ் வெளியிட்டார். இப்போஸ்டர்களில் ‘கரிகாலன்’ என்ற ரஜினி கதாபாத்திரத்தின் லுக் வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply