Friday, February 7
Shadow

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்துள்ள ‘காலா’ படத்தின் டப்பிங் பணி சென்னை மையிலாப்பூரில் உள்ள நாக் ஸ்டூடியோவில் நடைபெறுகிறது.

‘கபாலி’ படத்தை தொடர்ந்து ,ரஜினி மற்றும் இயக்குனர் ரஞ்சித் ஆகியோர் இணைந்து ‘காலா’ படத்தை உருவாக்கி உள்ளனர். இப்படத்தினை நடிகர் தனுஷ் தயாரிக்க, சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார்.மேலும், இதில் சமுத்திரகனி, நானா படேகர், சம்பத், சாயாஜி ஷிண்டே, அருள்தாஸ், ஹூமா குரேஷி, வத்திக்குச்சி திலீபன், அரவிந்த் ஆகாஷ், சுதான்ஷூ பாண்டே, ஈஸ்வரிராவ், சாக்ஷி அகர்வால் என பலரும் நடித்துள்ளனர்.

இந்த படத்தின் படபிடிப்பு முடிவடைந்துவிட்டது அதோடு இந்த படத்தின் இறுதி கட்ட வேலைகள் மிகவும் மும்முரமாக நடக்க இயக்குனர் ரஞ்சித் திட்டமிட்டு உள்ளார் அதோடு இந்த படத்தின் தரம் மற்றும் தொழில்நுட்பம் சிறப்பாக அமையவேண்டும் என்று சென்னையில் உள்ள மிக சிறந்த ஸ்டுடியோவான நாக் ஸ்டூடியோவில் நடைபெறுகிறது.

இதனால் இந்த படத்தின் தரம் இகவும் சிறப்பாக அணையும் என்று எதிர்பார்க்கபடுகிறது காலா திரைப்படம் 2018 ஆம் ஆண்டு திரைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது

Leave a Reply