
தமிழ் சினிமாவில் மிகவும் எதிர்பார்ப்பு உள்ள படம் என்றால் தற்போது போகன் என்று உறுதியாக சொல்லலாம் காரணம் இந்த படத்தின் பாடல்களும் டீசெர்ரும் தான் முக்கிய காரணம்.
இந்த படத்தின் ரிலீஸ் தேதி பல முறை தள்ளிபோனது ரசிகர்களுக்கு கொஞ்சம் வருத்தம் தான் இருந்தும் இந்த படத்துக்கு மிக பெரிய எதிர்பார்ப்பு என்று தான் சொல்லணும்.காரணம் இந்த படத்தின் வெற்றி கூட்டணியும் ஒரு காரணம் ஒன்று அரவிந்த்சாமி அடுத்து ரோமியோ ஜூலியட் வெற்றி கூட்டணி ஹன்சிகா இயக்குனர் லக்ஷ்மன் இந்த வெற்றி கூட்டணியும் மேலும் பெரிய எதிர் பார்ப்பை உண்டு பண்ணியுள்ளது.
இன்று மாலை இந்த ப்படத்தின் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பு நடந்தது நாளை படம் ரிலீஸ் வைத்து கொண்டு புதுசாக இன்று பத்திரிக்கையாளர் சந்திப்பு என்னவென்று போனால் படத்தின் முக்கிய நட்சத்திரம் ஜெயம் ரவி ஹன்சிகா மற்றும் வருண் தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் மற்றும் பிரபுதேவா கலந்து கொண்டனர் இந்த நிகழ்வில் படத்தின் மொத்த பாடல்களும் மற்றும் ட்ரைலர் அது மட்டும் இல்லாமல் படத்தின் இடைவேளை காட்சியும் ஒளிபரப்பினார்கள் பாடல்கள் அனைத்தும் மிகவும் சிறப்பான முறையில் காட்சி படுத்தி இருந்தனர் பாதத்தின் ஒளிப்பதிவு அற்புதம் ஹன்சிகா செம அற்புதம் வாலிபர்களே புரிந்து இருக்கும் சும்மா சுண்டி இழுக்கிறார். இம்மான் இசையில் பாடல்கள் சூப்பர் ஹிட் என்று தான் சொல்லணும். சரிவிடுங்க இடைவேளை காட்சி திரையிட்டனர். சும்மா அதிருது இந்த ஒரே காட்சியே நம்மை சேர் நுனிக்கு கொண்டு சென்றது அந்த அளவுக்கு விறுவிறுப்பு.
தனி ஒருவன் அரவிந்த்சாமியை விட இந்த போகன் அரவிந்த்சாமி சும்மா கலக்கி இருக்கிறார் என்று தான் சொல்லணும் என்ன ஒரு ஸ்டைல் என்ன ஒரு நடிப்பு இந்த வயதிலும் சும்மா இன்னிக்கி இருக்க எல்லா ஹீரோக்களை விட சும்மா ஜம்முனு இருக்காரு அது மட்டுமா நடிப்பில் அப்படி யோவ் எங்கயா இவ்வளவு நாள் இருந்த வாவ் செம இவருக்கு ஒன்னும் நம்ம ஹீரோ ஜெயம்ரவியும் சும்மா சோடை போகல அவரும் அவர் ஸ்டைலேக்கு போட்டி போட்டுள்ளார் என்று தான் சொல்லணும் மொத்தத்தில் இந்த படம் தமிழ் சினிமாவுக்கு மேலும் ஒரு மைல்கல் போல தான் அமையும் என்பதில் சந்தேகம் இல்லை ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு போதும் அது போலதான் இந்த ஒரு காட்சியே இந்த படத்தின் வெற்றியை தீர்மானித்துள்ளது,